புதுடெல்லி: ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியைப் பெறுவதற்கு இந்தியா ஆர்வம் தெரிவித்துள்ளது. ஸ்பூட்னிக் வி (Sputnik V) என பெயரிடப்பட்ட "உலகின் முதல் பதிவுசெய்யப்பட்ட கோவிட் -19 தடுப்பூசி" குறித்த ரஷ்ய வலைத்தளத்தின் அறிக்கையில், இந்தியா மற்றும் 20 நாடுகள் தடுப்பூசி பெறுவதில் ஆர்வம் காட்டியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், பிரேசில், மெக்ஸிகோ மற்றும் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகள் ஸ்பூட்னிக் வி (Sputnik V) ஐப் பெறுவதற்கு ஆர்வம் காட்டியுள்ளன" என்று அந்த அறிக்கை கூறுகிறது.


ரஷ்ய அதிபர் செவ்வாயன்று தனது நாடு COVID க்கு எதிராக தடுப்பூசி (Russian COVID vaccine) கண்டு பிடிக்கப்பட்டதாக அறிவித்தார். அவரது மகள்களுக்கு ஒரு தடுப்பூசி டோஸ் வழங்கப்பட்டது எனவும் கூறினார். 


ALSO READ |  உலகின் முதல் கோவிட் -19 தடுப்பூசி: ரஷ்யாவிடம் 100 கோடி தடுப்பூசி ஆர்டர் செய்த 20 நாடுகள்


இது ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் நாட்டின் பிற அரசாங்க அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து கமலேயா ஆராய்ச்சி (Gamaleya Research Institute) நிறுவனம் இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. 


"இந்த தடுப்பூசியில் வலுவான நோய் எதிர்ப்பு இருக்கிறது. இதை வாங்க உலக நாடுகளின் ஆர்வம் காட்டுகிறது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ALSO READ |  நீண்டகால காத்திருப்பு முடிவுக்கு வந்ததா... கொரோனா தடுப்பு மருந்து தயார் என்கிறது ரஷ்யா!!


"சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) , பிரேசில், இந்தியா (India)  மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்தவும், அதேநேரத்தில் "இந்தியா, தென்கொரியா மற்றும் பிரேசில், சவுதி அரேபியா, துருக்கி மற்றும் கியூபா போன்ற நாடுகளில் கூட்டாக இணைந்து, அந்தந்த நாடுகளில் உற்பத்தியைத் தொடங்கவும் திட்டமிடப்படுகிறத" எனவும் கூறப்பட்டு உள்ளது. 


ALSO READ |  Big Breaking: நாட்டின் முதல் கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் 15ம் தேதி அறிமுகப்படுத்தப்படும்


தடுப்பூசியின் பெருமளவிலான உற்பத்தி (Mass production of the vaccine) செப்டம்பர் 2020 இல் தொடங்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. எதிர்காலத் திட்டங்களில் 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தடுப்பூசி உற்பத்தியை 200 மில்லியன் அளவுகளாக உயர்த்துவது என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. அதில் ரஷ்யாவில் தயாரிக்கப்படும் 30 மில்லியன் டோஸ் அடங்கும்.