மும்பை: மகாராஷ்டிரா அரசியலில் ஒரு மாத கால நாடகத்திற்குப் பிறகு, பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் மகாராஷ்டிரா முதல்வராகவும், என்.சி.பியின் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றார். இவர்களுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து பாஜக, அஜித் பவார் கூட்டணியில் மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ், சிவசேன மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீதிபதி ரமணா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்பொழுது பாஜக அரசு பெரும்பான்மை இன்றே நிருபிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் நாங்கள் ஆட்சியமைக்க உரிமை கோருவோம் என்று சிவசேனா தரப்பில் கூறப்பட்டது. ஆனால் பாஜக தரப்பில் பெரும்பான்மை நிருப்பிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற இருதரப்பு விவாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக உத்தரவு நாளை காலை பிறப்பிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.


இதனையடுத்து தங்கள் தரப்பு எம்.எல்.ஏக்கள் வேறு கட்சிக்கு சென்று விடக்கூடாது என்று அனைத்து கட்சிகளும் தனியார் நட்சத்திர ஓட்டல் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர். 


இந்தநிலையில், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தனது ட்விட்டர் பக்கத்தில், சிவசேனா கூட்டணியின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் (சிவசேனா - என்.சி.பி - காங்கிரஸ்) 162 பேரையும் இன்று மாலை 7 மணிக்கு மும்பையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலான கிராண்ட் அயாத்தில் ஒன்றிணைக்கப் போவதாகவும், அதன் மூலம் தங்கள் பலத்தை காட்டப்போவதாகவும் கூறியுள்ளார். மேலும் சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் தனது ட்வீட்டில் மகாராஷ்டிரா ஆளுநரை டேக் செய்து பார்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.


மும்பை ஹோட்டல் கிராண்ட் ஹையாத்தில் நடைபெறும் எம்.எல்.ஏக்கள் அணிவகுப்பின் போது சிவசேனா தலைவர்கள் உத்தவ் தாக்கரே மற்றும் ஆதித்யா தாக்கரே ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.


அதேபோல மறுபுறத்தில், பெரும்பான்மை குறித்து பாஜக தலைவர் ராவ்சாஹேப் பாட்டீல் டான்வே கூறியது, "ஆபரேஷன் லோட்டஸ் எல்லாம் இல்லை, பெரும்பான்மை நிருபிக்க போதுமான எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். நாங்கள் எந்த எம்.எல்.ஏ.வையும் அச்சுறுத்தவில்லை. சஞ்சய் ரவுத்தின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்த அவர்,  அவரது குற்றச்சாட்டுகள் பொய்யானவ. சில நாட்களுக்குப் பிறகு அவர் ஒரு மனநல மருத்துவமனைக்கு அனுப்பப்பட வேண்டியிருக்கும்'' என்றார்.


காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மகாராஷ்டிராவில் பாஜக மேற்கொண்டு மிகப்பெரிய அரசியல் நாடகத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். அதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "தொலைக்காட்சி காட்டுகிறது மகாராஷ்டிராவில் பாஜக என்ன செய்து கொண்டிருக்கிறது என்று.., அரசியலமைப்பை குழிதோண்டி புதைத்து விட்டு, கர்நாடக மாநிலத்தில் நடத்திய ஜனநாயகத்திற்கு எதிரான விளையாட்டை மீண்டும் மகாராஷ்டிராவில் பாஜக செய்ய முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.


மகாராஷ்டிராவின் 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பாஜகவுக்கு 105, சிவசேனா 56, என்சிபி 54, காங்கிரஸ் 44 இடங்கள் கிடைத்தன. மற்ற இடங்களில் சுயேச்சை மற்றும் சிறு கட்சிகள் வென்றனர்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.