ஒடிசா மாநிலம் புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையை கடும் நிபந்தனைகளுடன் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது...!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒடிசா மாநிலம் பூரியில் ஜகந்நாதர் கோயில் ரதயாத்திரைக்கு நிபந்தனையுடன் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பில் சமரசத்தை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த தலைமை நீதிபதி, வழிகாட்டு நெறிமுறைகளுடன் பூரி ஜகந்நாதர் கோயில் ரத யாத்திரை நடத்தலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார். 


ஒடிஷா மாநிலத்தின் கடற்கரை நகரான பூரியில் புகழ்பெற்ற ஜகந்நாதர் கோவில் அமைந்துள்ளது. கடந்த 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவிலில் பாலபத்ரா, அவர் சகோதரர் ஜகந்நாதன் மற்றும் சகோதரி சுபத்ரா தேவி ஆகியோர் மூலவர்களாக உள்ளனர். மூன்று மூலவர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் புது தேர் செய்யப்பட்டு தேரோட்டம் நடப்பது பொது வழக்கம். இந்த ரத யாத்திரை கோவிலில் இருந்து கிளம்பி 2 KM தூரத்தில் உள்ள மவுசிமா என்னும் இவர்கள் அத்தை கோவில் வரை செல்லும். அங்கு 9 நாள் தங்கி இருந்து மீண்டும் புறப்பட்ட இடத்துக்கு ரதம் வந்து சேரும். அதன் பிறகு இந்த ரதங்கள் கலைக்கப்படும். 


சுமார் 14 அடி நீளம் உள்ள ஒவ்வொரு தேரும் தெருக்களில் செல்லும் போது மக்கள் மேள தாளங்கள், இசைக் கருவிகளுடன் ஊர்வலத்தில் கலந்துக் கொள்வார்கள். இந்த 10 நாள் உற்சவத்தை காண உலகெங்கும் இருந்து லட்சக்கணக்கானோர் இங்கு வருவார்கள். இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை வரும் 23 ஆம் தேதி தொடங்க இருந்தது. ஒரிசா விகாஸ் பரிஷத் என்னும் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பூரி ஜகந்நாதர் தேரோட்டம் நடக்கும் போது பாதிப்பு மேலும் அதிகரிக்கும் எனவும், லட்சக்கணக்கானோர் கலந்துக் கொள்ளும் விழாவில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாது எனவும் தெரிவித்து. 


READ | மீண்டும் சிறு குழந்தையாய் மாறினார் நயன்தாரா; இணையத்தில் வைரலாகும் Video!


இந்த விழாவுக்குத் தடை விதிக்க கோரிக்கை விடுத்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய மற்றும் மாநில அரசுகள், கோரோனாவைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளைப் பின்பற்றி ரத யாத்திரையை நடத்த மத்திய, மாநில அரசுகள் ஒப்புக் கொண்டால், கடந்த 18 ஆம் தேதி ரத யாத்திரையை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறியது. மேலும், மிகவும் கட்டுப்பாட்டுடன், பக்தர்கள் இல்லாமல் ரத யாத்திரையை நடத்தவும் உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்தது. இதற்கும், மத்திய அரசுடன் இணைந்து செயல்படவும் ஒடிசா அரசு ஒப்புக் கொண்டது. இதையடுத்து, ஒடிசா மாநிலம் புரி ஜெகந்நாதர் யாத்திரையை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. அதே சமயம், ஜூன் 18 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறுவதாகவும், ரத யாத்திரையில் ஏராளமானோர் பங்கேற்றால் கொரோனா தொற்றுப் பரவும் அபாயம் அதிகம். மேலும், ரத யாத்திரை முடிந்த பிறகு அனைவரையும் அடையாளம் காண்பதும் முடியாத காரியம் என்றும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.