மீண்டும் சிறு குழந்தையாய் மாறினார் நயன்தாரா; இணையத்தில் வைரலாகும் Video!

முழு அடைப்பால் வீட்டில் அடைந்திருக்கும் நட்சத்திர ஜோடி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும், இந்த விடுமுறை காலத்தில் மீண்டும் குழந்தையாக மாறியுள்ளனர். 

Updated: Jun 22, 2020, 10:42 AM IST
மீண்டும் சிறு குழந்தையாய் மாறினார் நயன்தாரா; இணையத்தில் வைரலாகும் Video!
IMAGE FOR REPRESENTATION

முழு அடைப்பால் வீட்டில் அடைந்திருக்கும் நட்சத்திர ஜோடி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும், இந்த விடுமுறை காலத்தில் மீண்டும் குழந்தையாக மாறியுள்ளனர். 

கோலிவுட் திரையுலகில் மிகவும் அபிமான ஜோடிகளில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஒருவர். இருவரும் முதல் முறையாக நானும் ரவுடி தானின் செட்களில் ஒருவரை ஒருவர் சந்தித்து, பின்னர் தங்கள் அடுத்தக்கட்ட வாழ்க்கையை நோக்கி நகர்ந்து வருகின்றனர். தொழில் ரீதியாக ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதில் இருந்து விடுமுறை படங்களை பகிர்வது வரை, நயன்தாராவும் விக்னேஷும் ஒருவருக்கொருவர் பொருத்தமான ஜோடி என அவ்வப்போது நிரூபித்து வருகின்றனர்.

நயன்தாராவிற்கு கொரோனாவா?.... விக்னேஷ் சிவன் வெளியிட்ட பகீர் தகவல்...!

இந்த ஆண்டு நிறைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்யலாம் என வதந்திகள் பரவி நிலையில், அவர்களின் முழு அடைப்பு கொண்டாட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

And .., that’s how we see the news about us, the corona and the imagination  

A post shared by Vignesh Shivan (@wikkiofficial) on

சமீபகாலமாக FaceApp பயன்பாடு பயன்படுத்தி எடுக்கப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் தற்போது, நட்சத்திர ஜோடியின் வீடியோவும் FaceApp பயன்பாடு கொண்டு தயாரிக்கப்பட்டதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. எவ்வாறாயினும் இந்த வீடியோ பார்பவர் மனதை கவரும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

பணி முன்னணியில், நயன்தாரா அடுத்ததாக நெற்றிகண் திரைப்படத்தில் காணப்படுவார். இப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார், இது அவரது தயாரிப்பு பதாகையின் கீழ் முதல் படம் ஆகும்.

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்: ட்விட்டரில் வைரலாகும் பட ஸ்டில்கள்...

தொடர்ந்து RJ பாலஜியின் மூக்குத்தி அம்மன், காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படங்களிலும் நடிக்கின்றார். காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தா அக்கினேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விக்னேஷ் சிவன் இப்படத்தின் எழுத்தாளராகவும் பணியை ஏற்கின்றார்.