புதுடெல்லி: 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டம் கட்டமாக பள்ளிகளை மீண்டும் தொடங்குவதற்கான (Schools Reopening) நிலையான இயக்க நடைமுறைகளை (SOP) வெளியிட்ட பின்னர், கல்வி நிறுவனங்கள் திங்கள்கிழமை, செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை மீண்டும் திறப்பது கட்டாயமில்லை என்று நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 வகுப்புகளை மீண்டும் தொடங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்க மாநிலங்களுக்கு அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.


அதற்கேற்ப, பல மாநிலங்கள் (States) மற்றும் யூனியன் பிரதேசங்கள் (Union Territories), வகுப்புகளை மீண்டும் தொடங்க அனுமதிக்கப் போகிறார்களா இல்லையா என்பது குறித்த முடிவை அறிவித்துள்ளன. ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க டெல்லி மற்றும் ஹரியானா அரசு முன்வந்துள்ள நிலையில், அதிகரித்து வரும் COVID-19 தொற்று காரணமாக இந்த மாதமும் பள்ளிகளை திறக்காமல் இருக்க கேரளா மற்றும் உ.பி. முடிவு செய்துள்ளன.


இது குறித்து பல்வேறு மாநிலங்கள் எடுத்துள்ள முடிவுகளைக் காணலாம்:


தமிழ்நாடு: தமிழகத்தில் (Tamil Nadu), பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் ஆலோசனைகளைப் பெறாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்ளாமல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படாது என்று பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


ALSO READ: பெற்றோர், மாணவர்களை ஆலோசிக்காமல் பள்ளிகள் திறக்கப்படாது: அமைச்சர் செங்கோட்டையன்


டெல்லி: கடந்த வாரம், தேசிய தலைநகரில் அரவிந்த் கெஜர்வால் (Arvind Kejriwal) தலைமையிலான அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டு, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தங்கள் பள்ளிகளில், கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில், தன்னார்வ அடிப்படையில், தங்கள் ஆசிரியர்களிடமிருந்து வழிகாட்டுதல்களைப் பெறலாம் என்று கூறினார். "அனைத்து பள்ளிகளும் செப்டம்பர் 30 வரை தொடர்ந்து மூடப்பட வேண்டும். 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தங்கள் பள்ளிகளுக்கு செல்லலாம். கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் உள்ளவர்கள் மட்டுமே, தன்னார்வ அடிப்படையில், தங்கள் ஆசிரியர்களிடமிருந்து வழிகாட்டுதல்களைப் பெற அனுமதிக்கப்படுவார்கள். இது அவர்களின் பெற்றோர் / பாதுகாவலர்களின் எழுத்துப்பூர்வ ஒப்புதலுக்கு பிறகே அனுமதிக்கப்படும். இதற்காக பள்ளிகள், சுகாதார அமைச்சகத்தால் வழங்கப்படும் SOP-ஐ பின்பற்ற வேண்டும்”என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது.


பீகார்: ஒரு உத்தரவை பிறப்பித்து, பாட்னா டி.எம்.குமார் ரவி, கல்வி நிறுவனங்களுக்கு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே வகுப்புகளை மீண்டும் தொடங்க அனுமதித்துள்ளார்.


ஆந்திரா: ஆந்திராவில் உள்ள பள்ளிகளும் செப்டம்பர் 21 முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகளை மீண்டும் தொடங்க உள்ளன. இது தொடர்பாக பள்ளி அதிகாரிகளும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளனர்.


ஹரியானா: மனோகர் லால் கட்டர் (Manohar Lal Kattar) தலைமையிலான ஹரியானா அரசு, கர்னால் மற்றும் சோனிபட் மாவட்டங்களில் உள்ள இரண்டு அரசுப் பள்ளிகளில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சோதனை அடிப்படையில் வகுப்புகளைத் தொடங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


உத்தரபிரதேசம்: பாஜக ஆளும் மாநிலங்களில் ஒன்றான உத்தரபிரதேசத்தில், COVID-19 வழக்குகள் அதிகரித்து வருவதால் பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் இந்த மாதத்தில் மூடப்பட வாய்ப்புள்ளது.


கேரளா: COVID-19 தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில், இந்த மாதம் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களை மூட கேரள முதல்வர் பினராயி விஜயன் முடிவு செய்துள்ளார்.


உத்தரகண்ட்: திருவேந்திர சிங் ராவத் தலைமையிலான அரசாங்கமும் இந்த மாத இறுதி வரை பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது.


ஜம்மு-காஷ்மீர்: மாநிலத்தில் பள்ளிகள் செப்டம்பர் 21 முதல் தன்னார்வ அடிப்படையில் மீண்டும் திறக்கப்பட உள்ளன.


குஜராத்: உ.பி.க்குப் பிறகு, திங்கள்கிழமை முதல் சாதாரண வகுப்புகளை மீண்டும் தொடங்குவதற்கு எதிராக முடிவு செய்துள்ள குஜராத் பாஜக ஆளும் இரண்டாவது மாநிலமாகும்.


அசாம்: அசாமில், 10-12 ஆம் வகுப்பு மாணவர்கள், கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் தங்கள் பள்ளிகளுக்கு செல்லலாம்.


இருப்பினும், மேற்கு வங்கம், கோவா, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், பஞ்சாப், ஒடிசா, ராஜஸ்தான், சிக்கிம் மற்றும் பிற மாநிலங்கள் இன்னும் வகுப்புகள் மீண்டும் தொடங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை.


ALSO READ: COVID-19 தொற்று பரவ முக்கிய காரணம் குடும்ப நபர்கள் தான்: பிரெஞ்சு சுகாதார அமைச்சர்!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR