பீகார் மாநிலம் பாட்னாவின் கதம் குவான் எனும் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து கதம் குவான் காவல் நிலையப் போலீஸார் அப்பகுதியில் சந்தேகத்திற்குரிய இடங்கள் அனைத்திலும் தேடுதல் வேட்டை நடத்தினர். பின்னர் மாணவர்கள் விடுதியில் வெடி பொருட்கள் இருக்க வாய்ப்புள்ளதாக விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் உடனடியாக போலீஸார் நேரில் சென்று மாணவர் விடுதியில் ஆய்வு நடத்தினர்.


சில மணி நேரங்களில் மாணவர்கள் விடுதியில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை போலீஸார் கைப்பற்றினர். மேலும் சப் இன்ஸ்பெக்டர் உமாகாந்த் ராய் தலைமையிலான குழு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளையும் வெடி பொருட்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.


பின்னர் பதியப்பட்ட வழக்கில் குற்றவாளிகளையும், ஆதாரங்களாக வெடி குண்டுகளையும் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்த வேண்டியிருந்தது. இதனால் நேற்று நீதிமன்றத்திற்கு குற்றவாளிகளையும், ஆதாரங்களையும் போலீஸார் பாதுகாப்பாக எடுத்துச்சென்றனர்.


மேலும் படிக்க | நிமிடங்களில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பது எப்படி?


வெடிகுண்டுகளை எடுத்து வந்த பெட்டியை போலீஸார் உதவி வழக்குரைஞரின் மேஜையில் வைத்தார். வழக்கும் வாதிடப்பட்டது. வழக்கின் இடையே வெடிகுண்டு ஒன்று பெட்டிக்குள்ளேயே வெடித்து சிதறியது. அப்போது அருகிலிருந்த காவலர் ஒருவருக்கு பலத்த காயமும் ஏற்பட்டது.



அப்போது வெடிகுண்டின் மற்றொரு பெட்டி பக்கத்து அறையில் இருப்பதாக போலீஸார் கூறியதால் நீதிமன்றத்தில் மேலும் பதற்றம் அதிகரித்தது. இந்த திடீர் குண்டு வெடிப்பால் பீதியடைந்த அவையோர் கலைந்து வெளியே ஓடினர். 


பின்னர் வெடிகுண்டுகளை செயலிழக்கச்செய்ய காவல்துறையின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினர் வரவழைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் முயற்சி செய்துவிட்டு வெடிகுண்டுகளை செயலிழக்க செய்ய முடியவில்லை என்று தெரிவித்தனர். 


மேலும் வெடிகுண்டை பாதுகாப்பாக செயலிழக்க செய்ய பயங்கரவாத எதிர்ப்பு படையின் (ஏடிஎஸ்) குழுவினர் தேவை எனவும் தெரிவித்தனர். இதனால் எந்த நேரத்திலும் குண்டுகள் வெடிக்க நேரிடும் என்ற நிலையில் வெடிகுண்டுகள் நீதிமன்றத்தின் உள்ளேயே 2 மணி நேரம் இருந்தது குறிப்பிடதக்கது.


நீதிமன்ற விதிமுறைகளின்படி ஆதாரமாக கொண்டு வரப்படும் வெடிகுண்டுகள் முன்னதாகவே செயலிழக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சப் இன்ஸ்பெக்டர் உமாகாந்த் ராய் தலைமையிலான குழுவினர் இந்த விதிமுறையை பின்பற்றாத காரணத்தால் இவ்வாறு நிகழ்ந்தது என நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.


மேலும் படிக்க | என்னை செல்லம் கொஞ்ச மாட்டியா: வைரலாகும் யானையின் கட்டிப்பிடி வைத்தியம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR