நாடு முழுவதும் சுமார் 900 இண்டிகோ விமானங்கள் தாமதமாகின. விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) விமான நிறுவனத்திடம் இருந்து இவ்வளவு அதிகமான விமானங்கள் தாமதம் ஆனது ஏன் என்பது குறித்து விளக்கம் கோரியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இண்டிகோவை தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ள DGCA நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் விமான தாமதங்களுக்குப் பின்னால் விளக்கம் / அளிக்க வேண்டும் என கோரியுள்ளது" என்று டிஜிசிஏ அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனமான ஏஎன்ஐயிடம் தெரிவித்தார்.


சனிக்கிழமையன்று, இண்டிகோவின் விமானச் செயல்பாடுகள் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக, கேபின் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் இல்லாததால் 900 விமானங்கள் தாமதமாகின என கூறப்படுகிறது.


பட்ஜெட் கட்டண விமான போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ,  தினசரி சுமார் 1600 விமானங்களை இயக்குகிறது.  அவற்றில் 50% க்கும் அதிகமானவை நேற்று நேரத்துடன் புறப்படுவதில், சிக்கல்களை எதிர்கொண்டன.



ஞாயிற்றுக்கிழமையும் ஊழியர்கள் தொடர்பான சிக்கல்களை விமான நிறுவனம் தொடர்ந்து எதிர்கொண்டது. எனவே பல விமானங்கள் தாமதமாகின.


IndiGo இன்னும் இந்த விஷயத்தில் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. இருப்பினும், மைக்ரோ பிளாக்கிங் தளமான Twitter இல் பல வாடிக்கையாளர் புகார்களுக்கு பதிலளித்த விமான நிறுவன பிரதிநிதிகள் "தாமதத்திற்கு வருந்துகிறோம்" என்று தெரிவித்தனர்.


மேலும் படிக்க | Sunspot AR30398: பூமியை மிக மோசமாக தாக்கும் சூரிய எரிப்பு



மேலும் படிக்க | பால்வீதியின் மிகப்பெரிய கருந்துளையில் கசிவு NASA தகவல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR