MP Prajwal Revanna Sexual Harassment Case Update in Tamil : பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் ஊழல்: முன்னாள் பிரதமர் எச்டியின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) லுக்அவுட் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. பிரஜ்வாலுக்கு எதிராக கர்நாடக அரசு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளதால் சிக்கல்கள் அதிகரித்து வருகின்றன. அவர் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு நிலையில், ஜெர்மனி தப்பி சென்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்


முன்னதாக, பிரஜ்வால் ரேவண்ணா சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) முன் ஆஜராக 7 நாட்கள் அவகாசம் கோரினார். ஆனால் அதே நாளில், பெண்ணின் புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட பிரஜ்வல் மற்றும் அவரது தந்தை எச்டி ரேவண்ணா ஆகியோருக்கும் எஸ்ஐடி நோட்டீஸ் அனுப்பியது. டெக்கான் ஹெரால்ட் வெளியிட்ட செய்தியில், லுக் அவுட் நோட்டீஸ் சுற்றறிக்கை வெளியிடப்பட்டு உள்ளதால், பிரஜ்வல் ரேவண்ணா நாட்டிற்குள் நுழைந்தவுடன் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்டு உள்ளது.


மேலும் படிக்க - பிரஜ்வல் ரேவண்ணா பதவி விலகுவாரா? ஆபாச சர்ச்சையில் சிக்கிய கர்நாடக அமைச்சர்கள் யார்.. யார்?


உண்மை விரைவில் வெல்லும் -பிரஜ்வல் ரேவண்ணா


கடந்த செவ்வாயன்று, கர்நாடக அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு (SIT) விசாரணைக்கு ஆஜராகுமாறு பிரஜ்வல் மற்றும் அவரது தந்தைக்கு சம்மன் அனுப்பியது. சம்மனுக்கு பதிலளித்த பிரஜ்வால், தான் பெங்களூரில் இல்லை என்றும், உண்மை விரைவில் வெல்லும் என்று புதன்கிழமை (மே 1) அன்று தனது எக்ஸ் தளத்தில் இரு பதிவை போட்டார். அதில் அவர், "பெங்களூருவில் இல்லாததால் விசாரணைக்கு உடனடியாக ஆஜராக முடியாத்கு. எனவே 7 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று சிறப்பு விசாரணைக் குழுவிடம் எனது வழக்கறிஞர் மூலம் தெரிவித்துள்ளேன். உண்மை விரைவில் வெல்லும்" என்று பதிவிட்டுள்ளார்.


காங்கிரசை குறிவைத்த அமித் ஷா


இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்ட பிறகு, பிரஜ்வால் நாட்டை விட்டு தப்பிச் சென்றார். மறுபுறம் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.


ஆபாச சர்ச்சை அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது


கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ள நிலையில், நாடு முழுவதும் பேசுப் பொருளாக மாறியுள்ளது. மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால், இந்த ஆபாச சர்ச்சை வீடியோ விவகாரம் அரசியலில் புயலைக் கிளப்பி உள்ளது.


மேலும் படிக்க - “விரக்தி, ஏமாற்றம், தோல்வி” பொய்களின் இயந்திரமாக மோடி மாறிவிட்டார் -ராகுல் காந்தி தாக்கு


பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்க -முதல்வர் சித்தராமையா


மறுபுறம் பல பெண்களுக்கு எதிராக குற்றச் செயல்களில் ஈடுபட்ட பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.


பிரஜ்வல் ரேவண்ணா மீது போடப்பட்டுள்ள வழக்குகள் என்னென்ன?


பிரஜ்வல் ரேவண்ணா மீது ஐபிசியின் 354A, 354D, 506 மற்றும் 509 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பாலியல் துன்புறுத்தல், மிரட்டல் மற்றும் பெண்ணின் கண்ணியத்தை சீர்குலைத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.


யார் இந்த பிரஜ்வல் ரேவண்ணா?


கர்நாடகாவின் ஹசன் தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா. மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் மற்றும் எச்.டி. ரேவண்ணாவின் மகனாவார். இந்தமுறையும் இவர் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) சார்பில் கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் பிரதமர் எச்.டி.தேவேகவுடாவுக்கு ரேவண்ணா மற்றும் குமாரசாமி ஆகிய இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ரேவண்ணா. இவர் எம்எல்ஏவாக இருக்கிறார். இவரின் மகன் தான் பிரஜ்வல் ரேவண்ணா என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க - பிரஜ்வால் ஆபாச வீடியோ குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா ரியாக்ஷன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ