டெல்லி ஜஹாங்கீர்புரி பகுதியில் அனுமன் ஜெயந்தி விழாவில் ஏற்பட்ட கலவரத்தில் 9 போலீசார் உட்பட ஏராளமானோர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென டெல்லி பாஜக தலைவர் அனீஷ் குப்தா மாநகராட்சிக்கு கடிதம் எழுதினார். பின்னர் மாநகராட்சி நிர்வாகம் வீடுகளை இடித்த நிலையில், உச்சநீதிமன்றம் தலையிட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றத் தடை விதித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனைத் தொடர்ந்து, இன்று காலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மாநகராட்சி மீண்டும் தொடங்கியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்கள் அதிகாரிகளையும் புல்டோசர்களையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் வலுவடைந்ததால் கட்டடங்களை இடிக்கும் பணி தற்காலிகமாக கைவிடப்பட்டது.


மேலும் படிக்க | விரைவில் விடுதலையாகலாம் பேரறிவாளன்: உச்ச நீதிமன்றத்தின் சூசகம்


ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை நிறுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பாதிக்கப்பட்ட மக்கள் இல்லாமல் அரசியல் கட்சிகள் நீதிமன்றத்தை அணுகுவது ஏன் எனக் கண்டனம் தெரிவித்தது. உயர்நீதிமன்றத்தைக் கூட அணுகாமல் நேரடியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததிற்கும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். மனுக்களை வாபஸ் பெறாவிட்டால் தள்ளுபடி செய்ய நேரிடும் எனவும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. 



மேலும் படிக்க | டெல்லி லாக்-டவுன்: CAA-வுக்கு எதிரான டெல்லி ஷாஹீன் பாக் போராட்டம் அகற்றப்பட்டது


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR