விரைவில் விடுதலையாகலாம் பேரறிவாளன்: உச்ச நீதிமன்றத்தின் சூசகம்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் பிரச்சனைக்கு விடிவெள்ளி பிறக்கலாம் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது உச்ச நீதிமன்றம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 4, 2022, 05:08 PM IST
  • பேரறிவாளன் விடுதலை வழக்கில் மெத்தனப்போக்கு
  • மத்திய அரசுக்கு காலக்கெடு விதித்த சட்ட அமர்வு
  • தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை ஆளுநர் ரவி கிடப்பில் போட்டதற்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி
விரைவில் விடுதலையாகலாம் பேரறிவாளன்: உச்ச நீதிமன்றத்தின் சூசகம் title=

புதுடெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக கருதப்படும் பேரறிவாளனை விடுதலை செய்யும் விவகாரத்தில் விரைவில் முடிவு வந்துவிடும் என்று நம்பப்படுகிறது.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் பிரச்சனைக்கு விடிவெள்ளி பிறக்கலாம் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது உச்ச நீதிமன்றம். 

தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு விசாரணையில் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மத்திய அரசுக்கு காலக்கெடுவையும் விதித்தனர்.

மேலும் படிக்க | ஆளுநர் தனித்து முடிவு எடுக்க அதிகாரம் இல்லை - பேரறிவாளன் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றவாளியாகக் கூறப்படும் பேரறிவாளன்  திருப்பத்தூர் மாவட்டம் சோலையார்பேட்டையைச் சேர்ந்தவர். மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் தொழிநுட்பப் பட்டயம் பெற்ற இவருக்கு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட  பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனை 2011ம் ஆண்டு, செப்டம்பர் 9  நிறைவேற்றப்படவிருந்ததும் குறிப்பிடத்தக்கது. பிறகு தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு
சிறை தண்டனையை பேரறிவாளன் அனுபவித்துவந்தார்.

தற்போது மூன்று தசாப்தங்களாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை மத்திய அரசு விடுதலை செய்யாவிட்டால் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

பேரறிவாளனை விடுதலை செய்ய கோரும் வழக்கு விசாரணையை வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், இந்த வழக்கில், தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை ஆளுநர் ரவி கிடப்பில் போட்டதற்கும் கடுமையான கருத்தைப் பதிவு செய்தது.  

மேலும் படிக்க | பேரறிவாளன் இனி சிறை செல்லக் கூடாது: அற்புதம்மாள் கோரிக்கை

உச்சநீதிமன்றத்தின் அதிரடி

முன்னதாக, தமிழக ஆளுநரின் செயலுக்கு கடும் அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய நீதிமன்ற அமர்வு, பேரறிவாளனை ஜாமீனில் விடுதலை செய்தது. அதுமட்டுமல்ல, இந்த வழக்கின் விசாரணையின்போதே பேரறிவாளனை வழக்கில் இருந்து விடுதலை செய்யலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

தமிழக அமைச்சரவையின் தீர்மானத்திற்கு எந்தவித முடிவையும் சொல்லாமல், அதை குடியரசுத் தலைவரின்  (President) பரிந்துரைக்கு தமிழக ஆளுநர் அனுப்பி வைத்ததற்கும் நீதிபதிகள் கணடனம் தெரிவித்தனர். 
இதுபோன்று ஒரு மாநிலத்தின் ஆளுநர் செயல்படுவது கூட்டாட்சி தத்துவத்தை சீரழிக்கும் என்றும் வேதனை தெரிவித்தனர்.
 
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு முடிவு விரைந்து முடிவெடுக்காவிட்டால் நீதிமன்றமே அதை செய்துவிடும் என்று கறாராக சொன்ன நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பான விவகாரத்தில் தமிழக அமைச்சரவையின் முடிவு தொடர்பாக குடியரசு தலைவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அனுப்பிய ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழகம்
 
தமிழக ஆளுநராக 2021 செப்டம்பர் 18 அன்று பதவியேற்ற ஆர்.என் ரவி (Governor Ravindra Narayana Ravi), நாகாலாந்து, மேகாலயா  உட்பட பல மாநிலங்களில் ஆளுநராகப் பணியாற்றினார்.

பேரறிவாளன் விவகாரத்தில் மத்திய அரசுக்கு இறுதி கெடு விதித்த நீதிபதிகள், அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமைக்குள் (2022, மே 10) பேரறிவாளன் விடுதலை தொடர்பாக மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று காலக்கெடுவையும் விதித்தது.

இந்த உத்தரவை ஏற்று, பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் விடுதலை தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்கவேண்டும். இல்லையென்றால் உச்சநீதிமன்றமே அந்த வேலையை ஏற்றுக் கொள்ளும் என்றும் நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.

இப்படிப்பட்ட பரபரப்பான சூழலுக்கு இடையில் பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே இருக்கிறது என்று இன்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. 

மேலும், ஆளுநருக்கு எதிராக வாதிட முடியாது என்று மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கூறப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்ற அமர்வு, உங்களால் வாதிட முடியாது என்ற சூழ்நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்கும் என்று மத்திய அரசுக்கு குட்டு வைத்தது.

பரபரப்பான இந்த சூழலில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கும் பேரறிவாளன் வழக்கு விசாரணை, இந்திய அரசியல் களத்தில் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

மேலும் படிக்க | பேரறிவாளனுக்கு விரைவில் திருமணம்.!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News