இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போதே மும்பை பங்குச்சந்தை 34,603.72 புள்ளிகளுடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 290 புள்ளிகள் சரிவுடன் சென்செக்ஸ் 34660 ஆகா காணப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி பொறுத்தமட்டில் 86 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 10402 புள்ளிகளாக குறைந்தது.


நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று எண்ணப்பட்டு வருவதாலும், முன்னதாக இந்த மாநிலங்களில் நடைப்பெற்ற தேர்தல் முடிவுகள் குறித்து வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு பாஜக-விற்கு சாதகமாக இல்லாத நிலையிலும், கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க இருப்பதாக ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்ததும் சந்தையின் இறக்கத்திற்கு முக்கிய காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க பங்குச்சந்தை 2%-க்கும் அதிகமாக சரிவடைந்து காணப்பட்டது. இந்த சரிவும் இந்திய சந்தையில் தாக்கத்தை ஏற்பத்தி இருப்பதாக கூறப்படுகிறது. 


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்ளும் இன்றைய பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளன.