கோழிக்கோடு பகுதியில் மீண்டும் ஷிகெல்லா வைரஸ்! தமிழகத்திற்கு ஆபத்து?
ஷிகெல்லா வைரஸ் தொற்று கோழிக்கோட்டில் சுமார் ஒன்றரை வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஏற்பட்டுள்ளது.
ஷிகெல்லா வைரஸ் தொற்று கோழிக்கோட்டில் சுமார் ஒன்றரை வருட இடைவெளிக்குப் பிறகு, அந்த மாவட்டத்தை சேர்ந்த மூன்று குழந்தைகளுக்கு வைரஸ் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கிடைத்த தகவல்களின் படி, எரன்ஹிக்கலைச் சேர்ந்த ஒரு குழந்தையும், அத்தோலியைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. எரன்ஹிக்கலைச் சேர்ந்த மற்றொரு குழந்தைக்கு இதே போன்ற அறிகுறிகள் இருந்தாலும், பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை.
மேலும் படிக்க | கொரோனா 4ம் அலை தொடங்கிவிட்டதா; வெளியானது அதிர்ச்சி ரிப்போர்ட்
டிசம்பர் 2020-ல் கோழிக்கோடு மாவட்டத்தில் தொற்று காரணமாக 11 வயது சிறுவன் இறந்துவிட, மேலும் பலர் நோய்வாய்ப்பட்டனர். எரணிக்கல் பகுதியைச் சேர்ந்த குழந்தை வயிற்றுப்போக்கு காரணமாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தது. ஆய்வக சோதனைக்கு மல மாதிரிகள் அனுப்பப்பட்ட பிறகு தொற்று உறுதி செய்யப்பட்டது. அண்மையில் அப்பகுதியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட விருந்தில் குழந்தை பங்கேற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிகிச்சையில் இருந்த அவர் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது.
அத்தோலியில் உள்ள இரண்டு குழந்தைகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்கள் சமீப நாட்களாக உணவுக்காக வெளியே செல்லாததால் நோய்த்தொற்றின் ஆதாரம் தெளிவாக இல்லை. வயிற்றுப்போக்கு ஏற்பட்டதை அடுத்து அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து மாதிரிகள் ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டன, அதில் புதன்கிழமை பாக்டீரியா இருப்பதை உறுதி செய்தது. அந்தந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் சூப்பர் குளோரினேஷன் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக இரு இடங்களிலும் ஊராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்ட மருத்துவ அதிகாரி கூறுகையில், அசுத்தமான நீர் மற்றும் உணவு மூலம் பாக்டீரியா மனித உடலில் நுழைந்து ஷிகெல்லோசிஸ் ஏற்படுகிறது. இந்த கோடை மாதங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீர் மற்றும் உணவு சுகாதாரமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சானிடரி நாப்கின்கள் மற்றும் டயப்பர்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். அசுத்தமான குளங்கள், ஏரிகள், குளங்களில் நீச்சல் மற்றும் குளிப்பதை தவிர்க்க வேண்டும். விருந்துகளை ஏற்பாடு செய்பவர்கள் பரிமாறப்படும் உணவு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | BREAKING: 6-12 வயது குழந்தைகளுக்கு Covaxin அவசரகால பயன்பாட்டிற்கு DCGI அனுமதி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR