டோக்கியோ / புதுடெல்லி: உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வு பெறுவதாக அறிவித்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (Shinzo Abe), பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, இந்தியா-ஜப்பான்  கூட்டாண்மை (India Japan Partnership) மேலும் மேம்படுத்தப்படும் என்று தான் நம்புவதாகக் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் @narenarendramodi, அன்பான வார்த்தைகளால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள். நமது கூட்டாண்மை மேலும் மேம்படும் என்று நம்புகிறேன்" என்று பிரதமர் மோடியின் ட்வீட்டுக்கு பதிலளித்த அபே கூறினார்.



தன் உடல்நல பிரச்சினைகளை சுட்டிக்காட்டி அபே ஜப்பானின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தனது ட்விட்டர் அகௌண்டில், ஷின்ஸோ அபே விரைவாக குணமடைய வேண்டும் என தான் விரும்புவதாகக் கூறினார்.


 "உங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதைக் கேட்டு வேதனை அடைந்தேன். சமீபத்திய ஆண்டுகளில், உங்கள் புத்திசாலித்தனமான தலைமை மற்றும் தனிப்பட்ட அர்ப்பணிப்புடன், இந்தியா-ஜப்பான் கூட்டு முன்னெப்போதையும் விட ஆழமாகவும் வலுவாகவும் மாறிவிட்டது. நீங்கள் விரைவாக குணமடைய வேண்டும் என நான் விரும்புகிறேன், பிரார்த்தனை செய்கிறேன்” என்று கூறினார்.  இரு தலைவர்களின் புகைப்படத்தையும் பிரதமர் தனது ட்விட்டர் அகௌண்டில் பகிர்ந்துள்ளார்.



ஜப்பானின் மிக நீண்ட காலம் பிரதமரான அபே, கடந்த திங்கட்கிழமை, உடல்நல பிரச்சினைகளை மேற்கோளிட்டு பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2006 ஆம் ஆண்டில் தனது 52 வயதில் அந்த நாட்டின் அதுவரையிலான இளைய பிரதமராகி அவர் சரித்திரம் படைத்தார்.


ALSO READ: புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க ஜப்பானில் செப்டம்பர் 17 அன்று நாடாளுமன்ற அமர்வு


ஷின்ஸோ அபே ஜப்பானின் மிகச் சிறந்த பிரதமர் - டொனால்ட் டிரம்ப்


உலகத் தலைவர்கள் அபேவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, அவர் விரைவாக குணமடையவும் பிரார்த்திப்பதாகக் கூறினார்கள்.  ஞாயிற்றுக்கிழமை இரவு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) அபே-க்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்தான் ஜப்பானின் மிகச் சிறந்த பிரதமர் என்று புகழ்ந்தார்.


"பிரதமர் அபே மிக அருமையான பணிகளை செய்துள்ளார் என்றும், அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவு முன்பை விட இன்று சிறப்பாக உள்ளது என்றும் அதுபர் கூறினார் ... பிரதமர் அபே விரைவில் தனது பதவியை விட்டு விலகுவார் என்றாலும், ஜப்பானின் (Japan) எதிர்காலத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு பெரிய பங்கு வகிப்பார் என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்” என்று வெள்ளை மாளிகை ஞாயிற்றுக்கிழமை இரவு தெரிவித்துள்ளது.


ALSO READ: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ராஜினாமா செய்ய உள்ளார்... அடுத்த பிரதமர் யார்..!!!