Mamata Banerjee Injury: மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு தலை நெற்றியில் படுகாயம் ஏற்பட்டு ரத்த வழிந்தோடும் புகைப்படத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதன் X தளத்தில் பதிவிட்டுள்ளது. அதில்,"மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தயவுசெய்து அவர்கள் குணமடைய வேண்டிக்கொள்ளுங்கள்" என பதிவிடப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மம்தாவின் காயம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவரது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் சாலை விபத்து குறித்து அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்தேன். இந்த கடினமான நேரத்தில் என் எண்ணங்கள் அவருடன் உள்ளன, அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்" என பதிவிட்டுள்ளார். 


மேலும் படிக்க | தேர்தல் பத்திரம் விவரங்கள் வெளியீடு... யார் யார் நன்கொடை கொடுத்தார்கள்? - முழு லிஸ்ட்



அவர் அரசின் SSKM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும், இதுவரை எப்படி விபத்து ஏற்பட்டது என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், மம்தா பானர்ஜிக்கு அவரது வீட்டில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது. இருப்பினும், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவரது பதிவில் சாலை விபத்து என குறிப்பிட்டுள்ளார் என்பதையும் கவனிக்க வேண்டும். 



மம்தா பானர்ஜியின் நெற்றியில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. அதில் தொடர்ந்து ரத்தம் வழிந்தோடும் புகைப்படங்களை மட்டுமே அக்கட்சியினர் வெளியிட்டுள்ளனர். அவர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட வீடியோ உள்ளிட்ட சில காட்சிகள் மட்டும் ட்விட்டரில் வெளியாகி உள்ளது.



தொடர்ந்து, வெட்டு காயத்திற்கு தலையில் கட்டுப்போட்டு SSKM மருத்துவமனையில் இருந்து அவர் வெளியே செல்லும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளது. வெட்டு காயம் ஆழமாக இருப்பதாகவும், மம்தா பானர்ஜியின் உடல்நிலை விரைவில் குணமடைய வேண்டும் என்றும் அக்கட்சியினர் தொடர்ந்து வேண்டி வருகின்றனர். 



மேலும் படிக்க | 'தேர்தல் தேதி நாளை அறிவிப்பு?' அவசரமாக நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர்கள் - பின்னணி இதுதான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ