Online Child Sexual Abuse: 3 ஆண்டுகளில் இத்தனை வழக்குகளா? பகீர் ரிப்போர்ட்!!
இந்தியாவில் ஆன்லைன் குழந்தை பாலியல் துஷ்பிரயோக வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக சிபிஐ ஒரு பெரிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
புதுடெல்லி: 2017 மற்றும் 2020 க்கு இடையில், இந்தியாவில் 24 லட்சத்துக்கும் அதிகமான ஆன்லைன் குழந்தை பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் பாதிக்கப்பட்ட 80 சதவீதம் பேர் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகள் என்று இன்டர்போல் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்து, இந்தியாவில் ஆன்லைன் குழந்தை பாலியல் துஷ்பிரயோக வழக்குகளில் (CSAM) குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக சிபிஐ ஒரு பெரிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. பல வலைத்தளங்கள் கண்காணிப்புக்கு உட்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேகமாக அதிகரிக்கும் வழக்குகள்
CSAM உள்ளடக்கம் மற்றும் பயனர்கள் வேகமாக வளர்ந்து வருவதாக இன்டர்போல் தரவு சுட்டிக்காட்டுகிறது. ஒரு அறிக்கையின்படி, இணையதளத்தில் உள்ள சர்ச் எஞ்சின்களில் சிறுவர் ஆபாசங்கள் குறித்த ஆபாச (Sexual Content) தேடல்கள் 1.16 லட்சம் முறை செய்யப்பட்டுள்ளன. சமூக ஊடக வலைத்தளங்களின் பங்கு மற்றும் பொறுப்புக்கூறலை ஆய்வு செய்ய தொடர்புடைய சட்ட விதிகளின் கீழ் இந்த விஷயத்தை எடுக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “இன்டர்போலின் புள்ளிவிவரங்கள் கவலையளிக்கின்றன. இதன் மூலம், 24 லட்சம் ஆன்லைன் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 80 சதவீதம் பேர் பெண் குழந்தைகள்” என்றார்.
விரிவான விசாரணைக்கு தயாராகும் சிபிஐ
சிபிஐ ஆய்வு, முக்கியமாக, 50 ஆன்லைன் சமூக ஊடக (Social Media) குழுக்களில் கவனம் செலுத்துகிறது. இதில் உலகம் முழுவதிலுமிருந்து 5,000 பேர் CSAM ஐப் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த குழுக்களில் பாகிஸ்தானில் இருந்து 36, கனடாவில் இருந்து 35, அமெரிக்காவிலிருந்து 35, வங்க தேசத்திலிருந்து 31, இலங்கையிலிருந்து 30, நைஜீரியாவிலிருந்து 28, அஜர்பைஜானில் இருந்து 27, ஏமனில் இருந்து 24 மற்றும் மலேசியாவில் இருந்து 22 உறுப்பினர்கள் உள்ளனர்.
ALSO READ:கோவை மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு ஆர்.எஸ்.புரத்தில் பள்ளி முற்றுகை போராட்டம்
குற்றஞ்சாட்டப்பட்டவர்களை சட்டத்தின் கீழ் கொண்டு வரவும், குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான ஆன்லைன் உள்ளடக்கத்தின் மூலத்தைக் கண்டறியவும் இந்த நாடுகளின் சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் மத்திய நிறுவனம் இப்போது நெருங்கிய ஒருங்கிணைப்புடன் செயல்படும்
சிபிஐ நடவடிக்கை எடுத்து வருகிறது
"முறையான மற்றும் முறைசாரா வழிகளில் ஒருங்கிணைப்பு முகமைகளுடன் சிபிஐ (CBI) ஒருங்கிணைத்து வருகிறது,” என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
“இந்த நபர்கள் இப்படிப்பட்ட ஆன்லைன் தளங்கள் மூலம் தொடர்ந்து தங்கள் வங்கிக் கணக்குகளில் வருமான பெற்று வருகிறார்கள்.” என்றார் அவர். ஒரு பெரிய அளவிலான சோதனையின் ஒரு பகுதியாக, நவம்பர் 14 அன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நிறுவனம் ஒரு பெரிய பிரச்சாரத்தை மேற்கொண்டது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட 83 பேர் மீது 23 தனித்தனி எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டன.
ALSO READ:பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை வழக்கு; பெண் எஸ்.பி நேரில் ஆஜராகி சாட்சியம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR