Kerala Kannur Viral Video Latest News: பேஸ்புக், ட்விட்டர், யூ-ட்யூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தினந்தினம் பல்வேறு வீடியோக்கள் பதிவிடப்படுகின்றன. இணையத்தில் கொட்டிக்கிடக்கும் வீடியோக்கள் அவ்வப்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரல் ஆகும். அதிர்ச்சியளிக்கும் வீடியோக்கள், விழிப்புணர்வு வீடியோக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களில் வீடியோக்கள், வினோதமான வீடியோக்கள் என பல்வேறு வீடியோக்கள் அடிக்கடி வைரலாகி மக்கள் மத்தியில் பேசுப்பொருளாக இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடும் அதிகரித்துவிட்டது. ஸ்மார்ட்போனில் வீடியோ, புகைப்படங்கள் எடுக்கும் பழக்கங்களும் அதிகரித்துவிட்டது. யூ-ட்யூப் ஷார்ட்ஸ், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் வீடியோக்கள் பதிவிட்டு இன்டர்நெட் பிரபலமாகிவிட நினைக்கின்றனர். இதனால், எந்த இடமானாலும் சரி, எந்த நேரமானாலும் சரி ஸ்மார்ட்போனை வைத்து புகைப்படம், வீடியோ எடுப்பதை பலரும் ஒரு வேலையாகவே வைத்திருக்கின்றனர். தினமும் குறைந்தபட்சம் ஒரு வீடியோ அல்லது ஒரு புகைப்படத்தையாவது பதிவிட்டு தங்களின் இருப்பை இணையத்தில் பதிவு செய்துகொண்டே இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.


வைரலாகும் கேரள வீடியோ


அப்படியிருக்க, உங்களின் கண் முன்னே எதாவது அசம்பாவிதம் நடந்தாலோ, குற்றச்செயல்கள் நடந்தாலோ அது தட்டிக்கேட்கிறார்களோ இல்லையோ தங்களின் ஸ்மார்ட்போனை வைத்து பதிவுசெய்துவிடுகின்றனர். இது ஒரு வகையில் நல்லதுதான், ஏனென்றால் அவை குற்றவாளிகளுக்கு எதிரான ஆதரமாகிவிடுகிறது. மறுபுறம் யாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களையும் இதேபோல் சில வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில், கேரளாவில் ஒருவர் தன் கண்முன் நடந்த ஒரு வியப்பான சம்பவத்தை வீடியோ எடுத்து இணையத்தில் உலாவாவிட்டார், தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வைரல் வீடியோ எதை பற்றியது, எதனால் அது இவ்வளவு தூரம் வைரலானது ஏன் என்பது குறித்து இங்கு காணலாம். 


மேலும் படிக்க | Year Ender 2024: இந்தியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு எது? ஸ்விக்கியின் சுவாரஸ்ய தகவல்கள்!


வைரல் வீடியோ: திக் திக் காட்சிகள்


ரயில் வருவதை பார்க்காமல் தண்டவாளத்தை கடக்க நினைத்த ஒருவர், திடீரென தனது அருகே ரயில் வருவதை பார்த்து நொடிப்பொழுத்தில் தண்டவாளத்தில் அப்படியே படுத்து, உயிர்தப்பிய வீடியோ தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கேரளாவின் சிராக்கல் - கண்ணூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பன்னென்பாறை பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது.