கொரோனா: இந்தியாவில் விரைவில் பூஸ்டர் டோஸ்? SII நிறுவனம் கூறுவது என்ன..!!
சமீபத்தில், கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை SARS-CoV-2 புதிய மாறுபாடான `Omicron` அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு பூஸ்டர் டோஸ்களை அனுமதிப்பது குறித்து முடிவு செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தின.
புது தில்லி: சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII), நாட்டில் போதிய தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதைக் காரணம் காட்டி, கோவிஷீல்ட் பூஸ்டர் டோஸ் அஇப்பது தொடர்பாக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளரிடம் (DCGI) அனுமதி கோரியுள்ளது. கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டைச் சமாளிக்க பூஸ்டர் ஷாட் தேவை என்று சீரம் நிறுவனம் கூறியுள்ளது.
இங்கிலாந்தில் அனுமதி
இந்தியாவின் DCGI க்கு அனுப்பப்பட்ட விண்ணப்பத்தில், UK மருந்துகள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்புப் பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனம் AstraZeneca ChAdOx1 nCoV-19 தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் வழங்க ஏற்கனவே அனுமதித்துள்ளது என சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (SII) கூறியது.
ALSO READ | Omicron: WHO விடுத்துள்ள புதிய எச்சரிக்கை..!!
சில மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன
பூஸ்டர் டோஸ் அளிப்பது காலத்தின் தேவை என்றும், இந்த தொற்றுநோயிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள மூன்றாவது டோஸ்/பூஸ்டர் டோஸ் மிகவும் அவசியம் எனவும் சீரம் நிறுவனம் கூறியது. முன்னதாக, பூஸ்டர் டோஸ்களின் தேவைக்கான அறிவியல் ஆதாரங்களை, நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிசீலித்து வருவதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. சமீபத்தில், கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை SARS-CoV-2 இன் புதிய மாறுபாட்டின் 'Omicron' அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு பூஸ்டர் மத்திய அரசை (Central Government) வலியுறுத்தின.
மறுபுறம், டெல்லி உயர்நீதிமன்றம் நவம்பர் 25 அன்று மக்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்குவது தொடர்பான நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இரண்டாவது அலை போன்ற சூழ்நிலையை நாங்கள் விரும்பவில்லை என்றும் எனவே கொரோனா வைரஸ் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றவர்களுக்கு மூன்றாவது டோஸ் கொடுக்கலாம் எனவும் கூறிய நீதிமன்றம், இது தொடர்பாக அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறியது.
ALSO READ | இந்தியாவில் நுழைந்ததா ஒமைக்ரான்; சுகாதார அமைச்சகம் கூறுவது என்ன..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR