கொரோனா: OMICRON மீது சுகாதார அமைச்சகம் தீவிர நடவடிக்கை

கொரோனா வைரஸின் Omicron மாறுபாட்டின் வெளிப்பாட்டுடன் எடுக்கப்பட வேண்டிய கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் கடிதம் எழுதியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 28, 2021, 04:49 PM IST
  • சுகாதார அமைச்சகம் வேண்டுகோள்
  • மாநிலங்களுக்கு கடிதம்
  • முக்கியமான தகவல் பகிரப்பட்டது
கொரோனா: OMICRON மீது சுகாதார அமைச்சகம் தீவிர நடவடிக்கை title=

புதுடெல்லி: கொரோனாவின் கொடிய மாறுபாட்டான ஓமிக்ரான் (Omicron) குறித்து சுகாதார அமைச்சகம் (MHA) அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இது சம்பந்தமாக, அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது, இந்த மாறுபாடு கண்டறியப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் இந்தியா வந்தவுடன் கோவிட் பரிசோதனை (Covid Test) செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர்களின் அறிக்கை நேர்மறையானதாக இருந்தால், மாதிரியை INSACOG இன் ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது. அதனால் பாதிக்கப்பட்ட நபர் எந்த மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறியலாம்.

சோதனை விகிதத்தை அதிகரிப்பதில் வலியுறுத்தல்
மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் (Union Health Secretary Rajesh Bhushan) அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது., கொரோனாவின் ஆபத்தான Omicron மாறுபாடு கண்டறியப்பட்ட உலக நாடுகளை, இந்திய அரசு 'At Risk' என்ற பிரிவில் சேர்த்துள்ளது. அவரது கடிதத்தில், சுகாதார செயலாளர் மேலும் பரிசோதனையை அதிகரிக்குமாறு மாநிலங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ALSO READ | Health Alert! புதிய கோவிட் மாறுபாடு Omicron பரவுகிறது! பயணக் கட்டுப்பாடுகள் அமல்

கொரோனா நோய்த்தொற்றின் (Coronavirus) தீவிரம் அதிகரித்து வருவதைத் தடுக்க, மேலும் மேலும் பரிசோதனைகள் செய்ய வேண்டியது அவசியம் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில், சில மாநிலங்களில் RT-PCR சோதனைகள் (RT-PCR Test) சில காலமாக குறைக்கப்பட்டுள்ளன, அவை அதிகரிக்கப்பட வேண்டும், இதனால் உண்மையான விளைவு மற்றும் நிலைமையை அறிய முடியும்.

சிகிச்சை பெறுவதில் தாமதம் இருக்கக்கூடாது: MHA
உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்படாத வகையில், மருத்துவமனைகளில் போதிய சிகிச்சை வசதிகளை உறுதி செய்யுமாறு மாநிலங்களை மத்திய சுகாதாரத்துறை செயலர் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய அரசு வழங்கும் நிதி உதவியை மாநிலங்கள் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை செயலர் அந்த கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

ALSO READ | Omicron: பெங்களூரு வந்த 2 தென்னாபிரிக்க பயணிகளுக்கு கொரோனா! அது ஒமிக்ரானா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News