இந்தியா பொருளாதாரக் கொள்கைக்கு சிங்கப்பூர் முழுமையான ஆதாரம்: ஜெய்சங்கர்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் சிங்கப்பூர் பிரதான அம்சமாக இருந்து வருகிறது என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்!!
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் சிங்கப்பூர் பிரதான அம்சமாக இருந்து வருகிறது என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்!!
இந்தியாவின் பொருளாதார மற்றும் வணிகக் கொள்கைகளுக்கு சிங்கப்பூர் ஒரு முழுமையான இடமாக மாறியுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திங்கள்கிழமை தெரிவித்தார். சிங்கப்பூரில் நடைபெற்ற, 'ஸ்டார்ட்-அப் மற்றும் புதுமை கண்காட்சி' தொடக்க விழாவில் உரையாற்றிய ஜெய்சங்கர், "அரசியல், மூலோபாய மற்றும் பொருளாதார மற்றும் வணிக ரீதியான பகுதிகளில், சிங்கப்பூர் இந்தியாவின் கொள்கைகளுக்கு ஒரு முழுமையான ஆதாரமாக மாறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தடையின்றி இந்தியா சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கிடையே கடற்படையினரின் கூட்டுப்பயிற்சி நடைபெற்று வருகிறது. மேலும் சிங்கப்பூர் கடற்படையுடன் மட்டுமே இந்தியா தொடர்ந்து 25 ஆண்டுகளாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி நீண்ட காலமாக நம் இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவு சமீபத்தில் மேலும் வலுப்பெற்று வருகிறது. ஏனெனில் சமீபத்திய ஆண்டுகளில் உலகம் முழுவதும் பொருளாதார சிக்கலை சந்தித்து வருகிறது.
இதிலிருந்து இந்தியாவும் தப்பவில்லை. அயல்நாடுகளுக்கு வழங்க வேண்டிய நிதியாரத்தில் நாங்கள் பிரச்னையை சந்தித்தோம். அதுமட்டுமின்றி அதிரடியான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளிலும் இந்தியா இறங்கியது. இத்தகைய காலகட்டத்தில் இந்தியாவுக்கு ஓர் சிரமம் என்றதும் சிங்கப்பூரை நோக்கி நாம் கரம் நீட்டினோம். அதற்கு மிகவும் மெச்சத்தகுந்த அளவில் உங்கள் நடவடிக்கை இருந்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவின் வளர்ச்சியில் சிங்கப்பூர் ஓர் பிரதான பங்குதாரராக விளங்கி வருகிறது. இரு நாடுகளுக்கிடையே, பேச்சு வார்த்தை என்ற அளவில் தொடங்கிய உறவானது அதன் உச்சத்தை தொட்டுள்ளது என்று சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.