காஷ்மீர் சென்ற கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் யெச்சூரி, டி.ராஜா ஆகியோர் ஸ்ரீநகரில் தடுத்து நிறுத்தப்பட்டனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கும், அம்மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டதற்கும் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காஷ்மீரின் தற்போதைய நிலவரத்தை நேரில் பார்த்து அறிவதற்காகவும், கம்யூனிஸ்ட் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா ஆகியோர் இன்று காஷ்மீர் பயணம் மேற்கொண்டனர். 


ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட அவர்கள், காஷமீரில் அனுமதிக்க மறுக்கப்பட்டனர். 


முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவர் குலாம் அகமது மிர்ரும் காஷ்மீர் சென்ற நிலையில், இருவரும் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் காத்திருக்க வைக்கப்பட்டு டெல்லி திருப்ப அனுப்பப்பட்டனர்.


தற்போது கம்யூனிஸ்ட் தலைவர்கள் காஷ்மீர் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், விரைவில் இருவரும் டெல்லி திருப்பி அனுப்பபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


முன்னதாக டெல்லிக்கு வந்து சேர்ந்த குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடன் தெரிவிக்கையில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, உலக புகழ்பெற்ற காஷ்மீரை அழித்து விட்டது.  இதற்காக ஒவ்வொரு காஷ்மீரியிடமும் பிரதமரும், உள்துறை அமைச்சரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.