புதுடெல்லி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரியின் மூத்த மகன் ஆஷிஷ் எச்சூரி இன்று காலை கோவிட் -19 காரணமாக காலமானார். அவருக்கு வயது 34.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ட்விட்டரில் இதைப் பற்றி தெரிவித்த சீதாராம் எச்சூரி, தங்களுடன் இருந்து ஆதரவு அளித்தவர்களுக்கும், தன் மகனுக்கு சிகிச்சை அளித்தவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.


"எனது மூத்த மகன் ஆஷிஷ் எச்சூரியை இன்று காலை COVID-19 தொற்றுநோய்க்கு இழந்துவிட்டேன் என்பதை நான் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். எங்களுக்கு நம்பிக்கை அளித்து உறுதுணையாக இருந்தவர்களுக்கும், ஆதரவாக இருந்தவர்களுக்கும், சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், முன்னணி சுகாதார ஊழியர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் எங்களுடன் உறுதுணையாக இருந்த அனைவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார் எச்சூரி.



கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சீதாராம் எச்சூரியின் மகன் ஆஷிஷ் எச்சூரி குருகிராமிலுள்ள மேதந்தா மருத்துவமனையில் நன்றாக குணமடைந்து கொண்டிருந்தார். முன்னர் ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஆஷிஷ் எச்சூரி, பின்னர் மேதாந்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.


ALSO READ: 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி- மத்திய அரசு அறிவிப்பு!


34 வயதான ஆஷிஷ், டெல்லியில் (Delhi) ஒரு முன்னணி செய்தித்தாளில் மூத்த நகல் ஆசிரியராக (காப்பி எடிடர்) இருந்தார்.


ஜூன் 9 ஆம் தேதி 35 வயதை எட்டவிருந்த ஆஷிஷ், குருகிராமின் மேதந்தா மருத்துவமனையில் நன்றாக குணமடைந்து வந்ததாக குடும்பத்துக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர். இரண்டு வாரங்களாக இந்த தொற்றுடன் போராடிக்கொண்டிருந்த ஆஷிஷ் திடீரென இன்று அதிகாலை 5.30 மணியளவில் இறந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


COVID-19 தொற்றுநோயின் இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமாகப் பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 3 லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதனன்று மட்டும் 2000-க்கும் மேலானோர் இறந்ததாக சுகாதாரத் துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 


கடந்த ஆண்டு தொற்றுநோய் பரவத் தொடங்கியதிலிருந்து இது இதுவரை கண்டிறாத மிகப் பெரிய எண்ணிக்கையாகும். 


மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 2,95,041 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,023 பேர் இறந்தனர். இதனுடன் இந்தியாவில் இதுவரை பதிவாகியுள்ள தொற்றின் மொத்த எண்ணிக்கை 1,56,16,130 ஆகியுள்ளது. இதில் சிகிச்சையில் உள்ள 21,57,538 பேரும் அடங்குவர். 


இதுவரை 1,32,76,039 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,67,457 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த இறப்பு எண்ணிக்கை 1,82,553 ஆக உள்ளது.


பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்


ஆஷிஷ் எச்சூரியின் இறப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) இரங்கல் தெரிவித்துள்ளார்.


தனது ட்விட்டர் பதிவு மூலம் இரங்கல் தெரிவித்த பிரதமர், "ஸ்ரீ சீதாராம் யெச்சூரி ஜி-க்கும் அவரது குடும்பத்தினருக்கு அவரது மகன் ஆஷிஷின் துயர மற்றும் அகால மறைவுக்கு இரங்கல். ஓம் சாந்தி." என்று எழுதியுள்ளார்.



டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 24,638 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. தொற்றால் 249 பேர் இறந்தனர். 


டெல்லி அரசாங்கத்தின் சுகாதாரத் துறை புதன்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, டெல்லியின் கொரோனா வைரஸ் தொற்றின் மொத்த எண்ணிக்கை 9,30,179 ஐ எட்டியுள்ளது.


தற்போது, ​​டெல்லியில் 85,364 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் COVID-19 தொற்றுநோயிலிருந்து மொத்தம் 24,600 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லியில் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,31,928 ஆக உள்ளது.


ALSO READ: கடன் வாங்குவீர்களோ, பிச்சை எடுப்பீர்களோ, நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்க வேண்டும்: HC காட்டம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR