லடாக் எல்லையில் நீடிக்கும் பதற்றம்... தொடர்ந்து அத்து மீறும் சீனா..!!!
லடாக் எல்லையில் ரெஜாங் லா (Rejang La) சிகரத்திற்கு அருகில் நிலைமை மிகவும் பதற்றமாக உள்ளது. இந்திய வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், எச்சரித்ததாகவும் சீனா குற்றம் சாட்டியுள்ளது.
புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை பகுதியில் நிலைமை மிகவும் பதற்றமாக உள்ளது. தற்போது இந்திய மற்றும் சீனப் படைகள் இடையே பேச்சுவார்த்தை வருவதாக ஏ என் ஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
திங்களன்று எல் ஏ சி பகுதியில் உள்ள வீரர்கள் வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் பரஸ்பரம் குற்றம் சாட்டப்பட்டது. இந்திய வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், எச்சரிக்கை விடுத்ததாகவும் சீனா குற்றம் சாட்டியுள்ளது. அதே நேரத்தில், சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் வீரர்கள், ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டு, செவ்வாய்க்கிழமை வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, இந்திய ராணுவ வீரர்களை அச்சுறுத்தியதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. இந்த சம்பவம் திங்கள்கிழமை பாங்காங் திசோ (pangong tso) தெற்கு கரைக்கு அருகிலுள்ள ஷென்பாவ் மலை அருகே நிகழ்ந்தது.
செவ்வாயன்று, இந்திய இராணுவம் ஒரு அறிக்கையில், சீனா எல்லையில் "ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை" மேற்கொள்வதால், பதற்றம் அதிகரித்து வருகிறது. அவர்களது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை இந்திய படை வீரர்கள் தடுத்ததால்,சீன மக்கள் விடுதலை இராணுவ வீரர்கள்தான் இந்திய வீரர்களை " வானை நோக்கி சுட்டு" மிரட்ட முயன்றனர் என கூறப்பட்டுள்ளது. இந்திய இராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் அமன் ஆனந்த் கூறுகையில், எந்த பகுதியிலும் இந்திய இராணுவம் எல்.ஏ.சி.யைக் கடக்கவில்லை, துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட எந்தவொரு தாக்குதலையும் நடத்தவில்லை” என கூறியது.
சீன மக்கள் விடுதலை இராணுவம் "இராணுவ, ராஜீய மற்றும் அரசியல் மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்த பின்னரும் ஒப்பந்தங்களை மீறுவதோடு, ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது" என்று இராணுவம் கூறியுள்ளது.
மேலும் படிக்க | சிக்கிமில் 'ஜீரோ டிகிரி'யில் வழி தவறி தவித்த சீனர்களை காப்பாற்றிய இந்திய ராணுவம்..!!
கடந்த சில மாதங்களாக இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளின் கால்வான் பள்ளத்தாக்கு உட்பட எல்ஏசியில் பதற்றம் நிலவுகிறது.
சமீபத்தில், மாஸ்கோ சென்ற பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாங்கோங் ஏரி உள்ளிட்ட பதற்றம் உள்ள அனைத்து பகுதிகளிலிருந்தும், இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு இணங்க எல்லைப் பகுதிகளில் விரைவில் முழுமையான படைகளை விலக்கிக் கொள்ள சீனத் தரப்பு, இந்தியத் தரப்புடன் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம் என்று உறுதி பட தெரிவித்தார்.
மேலும் படிக்க | சீண்டினால் சிதறிப்போவீர்கள்... ராஜ்நாத் சிங் சீனாவிற்கு எச்சரிக்கை..!!!