நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் அனல் பறந்தது. அவைக்கு வந்த ராகுல்காந்தி முதன்முறையாக பல நாட்களுக்குப் பிறகு பேசத் தொடங்கினார். தன்னுடைய எம்பி பதவியை அங்கீகரித்ததற்கு சபாநாயகருக்கு நன்றி சொன்ன அவர், அதானி என்ற வார்த்தையை உச்சரித்ததும் பாஜக உறுப்பினர்கள் கூச்சலிடத் தொடங்கினர். சிறிது நேரம் அமைதியாக இருந்த அவர், அவரைப் பற்றி நான் பேசப்போவதில்லை, நீங்கள் அமைதியாக இருங்கள் என கூறிவிட்டு மணிப்பூர் விவகாரம் குறித்து பேசத் தொடங்கினார். " நான் இந்தியா முழுவதும் மேற்கொண்ட ஒற்றுமைப் பயணம் முடிவடையவில்லை. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சென்றபோது விவசாயிகளை நேரடியாக சந்தித்தேன். அவர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | நடிகர் பிரகாஷ் ராஜ் அமர்ந்த இடத்தை கோமியம் ஊற்றி சுத்தப்படுத்திய மாணவர்கள்..!


நான் மணிப்பூர் சென்றேன். ஆனால் பிரதமர் மோடி அங்கு செல்லவில்லை. மணிப்பூர் இரண்டாக பிரிந்து கிடக்கிறது. பிரதமர் மோடிக்கு மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லை. நீங்கள் இந்தியாவை கொலை செய்துவிட்டீர்கள். நீங்கள் துரோகிகள், தேசப்பக்தர்கள் அல்ல. மணிப்பூரில் மீண்டும் அமைதியை கொண்டு வர முடியும். ஆனால் அதைச் செய்ய பிரதமர் மோடி தயாராக இல்லை. நீங்கள் நாட்டையே எரிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். முதலில் மணிப்பூர், பிறகு ஹரியாணா என தொடர்ந்து கொண்டிருக்கிறது" என கடுமையாக சாடினார். பின்னர் ராஜஸ்தானுக்கு அவர் புறப்பட்டுச் சென்றார்.



அவருக்குப் பிறகு பேசிய ஸ்மிருதி இரானி, இந்தியா என்பது வாரிசு அரசியல் மற்றும் ஊழல் இல்லாதது. எதிர்க்கட்சிகள் பெயரளவில் இந்தியா என வைத்துக் கொண்டால் அது இந்தியா என்பது ஆகிவிடாது. நீங்கள் வாரிசு அரசியல் மற்றும் ஊழலை அறிமுகப்படுத்தியவர்கள் என்று குற்றம் சாட்டினார். மேலும், ராகுல்காந்தி வெளியே செல்லும்போது பெண் உறுப்பினர்கள் இருக்கும் பகுதியை நோக்கி பிளையிங் கிஸ் கொடுத்தார் என பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இது மிகவும் ஆபாசமானது, அறுவெறுப்பானது என குற்றம் சாட்டிய அவர், எனக்கு பதற்றமாக உள்ளது, ராகுல்காந்தி தவறாக நடந்து கொண்டிருக்கிறார். அவரும் அவரது கட்சியினரும் என்ன செய்கிறார்கள் என்பதே ராகுல்காந்தி பிரதிபலித்துள்ளார். இதுபோன்ற நிகழ்வை இதற்கு முன் பார்த்தது இல்லை. அவர் பெண்களைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதை காட்டுகிறது என கண்டித்துள்ளார்.



காங்கிரஸ் கட்சி விளக்கம்



இதனைத் தொடர்ந்து எழுத்துப்பூர்வமாக மக்களவை சபாநாயகரிடம் பாஜக பெண் எம்பிக்கள் ராகுல்காந்தியின் நடத்தை குறித்து புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து பேசிய காங்கிரஸ் கட்சியினர் ராகுல்காந்தியின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாததால் நாட்டில் இருக்கும் முக்கிய பிரச்சனைகளை திசை திருப்ப இத்தகைய கோழைத்தனமாக விஷயத்தை பாஜக கையில் எடுத்திருப்பதாகவும், இதன் உண்மை நிலையை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என விளக்கம் அளித்துள்ளனர். 


மேலும் படிக்க | முதலில் தக்காளி இப்போது வெங்காயம்.. எகிற இருக்கும் விலை! எவ்வளவு தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ