இணைப்பு ரயில் தாமதம் காரணமாக தெற்கு ரயில்வே சேவை ரத்து!
இணைப்பு வண்டி தாமதம் காரணமாக தொடர்வண்டி சேவை சிலவற்றை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது!
இணைப்பு வண்டி தாமதம் காரணமாக தொடர்வண்டி சேவை சிலவற்றை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது!
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்.,
ஆகஸ்ட் 19 இரவு 22.45 மணியளவில் சென்னை எக்மோரில் இருந்து புறப்படவிருந்த, சென்னை எக்மோர் - சேலம் வழித்தடம் செல்லும் வண்டி எண். 22153 இணைப்பு ரயில் தாமதம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 20 இரவு 21.20 மணியளவில் சேலம் சந்திப்பில் இருந்து புறப்படவிருந்த, சேலம் - சென்னை எக்மோர் வழித்தடம் செல்லும் வண்டி எண். 22154 இணைப்பு ரயில் தாமதம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 22 ஜபால்பூர் சந்திப்பில் இருந்து புறப்படவிருந்த, ஜபால்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் வண்டி எண். 02194 இணைப்பு ரயில் தாமதம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 24 திருநெல்வேலி சந்திப்பில் இருந்து புறப்படவிருந்த, திருநெல்வேலி - ஜபால்பூர் சிறப்பு ரயில் வண்டி எண். 02193 இணைப்பு ரயில் தாமதம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 19 அன்று இயக்க திட்டமிடப்பட்டு இருந்த டாக்டர் எம்.ஜி.ஆர் ரயில் நிலையம் - சாப்ரா கங்கா காவிரி எக்ஸ்பிரஸ் வண்டி எண். 12669 இத்தரஸி - போப்பால் - பின்னா - கன்ட்லி வழி மார்கமாக மாற்றிவிடப் பட்டுள்ளது.
ஆகஸ்ட் 18 அன்று இயக்க திட்டமிடப்பட்டு இருந்த மந்துதியா - ராமேஸ்வரம் வார வண்டி எண். 15120 கன்ட்லி - பின்னா - போப்பால் - இத்தரஸி வழி மார்கமாக மாற்றிவிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 20 அன்று இயக்க திட்டமிடப்பட்டு இருந்த பாட்னா - எர்னாக்குளம் வார வண்டி எண். 16360 கன்ட்லி - பின்னா - போப்பால் - இத்தரஸி வழி மார்கமாக மாற்றிவிடப் பட்டுள்ளது.
ஆகஸ்ட் 21 அன்று இயக்க திட்டமிடப்பட்டு இருந்த ராமேஸ்வரம் - மந்துதியா வார வண்டி எண். 15119 இத்தரஸி - போப்பால் - பின்னா - கன்ட்லி வழி மார்கமாக மாற்றிவிடப் பட்டுள்ளது.