உத்தரபிரதேச முதலமைச்சரை குறிவைத்து தாக்குதல் நடத்தவுள்ளதாக ஜெய்ஷ் இ- முகமது தீவிரவாத அமைப்பின் பெயரில் 2 கடிதங்கள் கிடைத்துள்ளதால், அம்மாநிலம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரபிரதேசத்தின் ஷாம்லி மற்றும் உத்தரகண்ட் ரூர்கீ ரயில் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரு கடிதத்தில், உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோரை குறிவைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.


வரும் மே 15 ஆம் தேதி உத்தரகண்ட், உத்தரபிரதேசம், டெல்லி மற்றும் அரியானாவில் உள்ள முக்கிய வழிபாடு தலங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் வெடி வைத்து தகர்க்கவுள்ளதாகவும் அந்த கடிதங்களில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, உத்தரபிரதேசம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.


முன்னதாக இதுபோல் கடந்த 19 ஆம் தேதி வந்த கடிதத்தில், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் வெடிவைத்து தகர்க்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.