IAS வெற்றிபெற்ற கேரளாவின் ஸ்ரீதன்யா மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆசி பெற்றார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவின்  ஸ்ரீதன்யா IAS தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின பெண் என்னும் பெருமையினை பெற்றுள்ளார். இவர் சமீபத்தில் தனக்கு பிடித்த கமல்ஹாசனை சந்திக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார். அவரின் விருப்பத்தை அறிந்த கமல்ஹாசன் அவரை சென்னைக்கு வரவழைத்து நேரில் சந்தித்தார்.


சென்னையில் கமல்ஹாசனை சந்தித்த  ஸ்ரீதன்யா அவரிடம் வாழ்த்து பெற்றார். இதன் மூலம் ஸ்ரீதன்யாவின் விருப்பத்தை கமல்ஹாசன் நிறைவேற்றியுள்ளார்.  ஸ்ரீதன்யாவுடன் IAS தேர்வில் வெற்றிபெற்ற மேலும் 10 பேர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.



இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீதன்யா,. கமல்ஹாசனை சந்தித்தது சிறந்த அனுபவமாக இருந்தது என்றும், அவர் ஒரு சிறந்த மனிதர் என்றும் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், ஸ்ரீதன்யாவை சந்தித்த பிறகு கமல்ஹாசன் அளித்த பேட்டியில், ‘ஸ்ரீதன்யா மிகப்பெரிய சாதனையாளர்; அதுதான் அவரின் முதல் தகுதி. ஸ்ரீதன்யாவின் வெற்றி கேரளா மற்றும் நாடு பெருமைப்பட வேண்டிய விஷயமாகும். அவருடைய இனத்தில், குலத்தில் உறவுக்காரர்கள் யாரும் செய்யாத விஷயத்தை ஸ்ரீதன்யா செய்துள்ளார்’ என்றும் கமல்ஹாசன் பெருமிதம் தெரிவித்துள்ளார்