புதுடெல்லி: மத்திய பட்ஜெட் 2021 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடுத்த நாளே, பாஜகவைச் சேர்ந்த  மாநிலங்களவை எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் இந்தியாவின் எரிபொருள் விலையை அண்டை நாடான நேபாளம் மற்றும் இலங்கையுடன் ஒப்பிட்டு சர்ச்சையை தொடங்கி வைத்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனது கருத்துக்களை அப்பட்டமாக வெளிப்படுத்தி அவ்வப்போது சர்ச்சைகளை உருவாக்குவதற்கு பெயர் பெற்றவர் சுப்பிரமணியம் சுவாமி. ராமரின் தாய்நாடான இந்தியாவில் பெட்ரோல் விலை 93 ரூபாய், ஆனால் ராவணனின் இலங்கையில் 51 ரூபாய்க்கு பெட்ரோல் கிடைக்கிறது என மாநிலங்களவை எம்.பி சுப்பிரமணியம் சுவாமி செய்யும் ஒப்பீடு செய்துள்ளார்.



நாட்டில் அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறித்து சுப்பிரமணியன் சுவாமிக்கு வருத்தம் என்பதை அவர் தனது டிவிட்டர் செய்தியில் வெளிப்படுத்தியுள்ளார்.  


Also Read | US: பாலியல் தொந்தரவு அச்சத்தால் நடுங்கிய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் Video


மெட்ரோ நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து ஆறாவது நாளாக மாறாமல் இருக்கிறது. டெல்லி மற்றும் மும்பையில் பெட்ரோல் விலை முறையே லிட்டருக்கு ரூ .86.30 மற்றும் ரூ .92.86 ஆக உள்ளது. டீசல் விலையானது, தேசிய தலைநகர் டெல்லியில் லிட்டருக்கு ரூ .76.48 ஆகவும், மும்பையில் ரூ .83.30 ஆகவும் உள்ளது. இது நான்கு பெருநகரங்களில் மிக அதிகபட்ச விலையாகும்.


முன்னதாக பிப்ரவரி முதல் நாளன்று மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் (Agriculture Infrastructure and Development Cess) விதிக்கப்படுவதாக தெரிவித்த்து. ஆனால், இதன் எதிரொலி எரிபொருள் விலையில் இருக்காது என்றும் நிதியமைச்சர் தெரிவித்திருந்தார். 


“பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் அதிகரிப்பு இருக்காது. மக்களுக்கு இந்த செஸ் வரி (Agriculture Infrastructure and Development Cess) கூடுதல் சுமையை ஏற்படுத்தாது. அரசாங்கம் கலால் வரியை குறைத்து, புதிய விவசாய செஸ்ஸைத் விதித்துள்ளது” என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் விளக்கம் கொடுத்திருந்தார்.  


ALSO READ: Elon Musk: உலகின் No.1 பணக்காரரைப் பற்றிய 10 சுவாரசியமான விஷயங்கள்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR