இனிப்பான செய்தி: மத்திய அரசின் ஏற்றுமதி கட்டுபாடுகளால் சர்க்கரை விலை குறையும்
பணவீக்கத்தில் இருந்து சாமானிய மக்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், கோதுமை ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது சர்க்கரை விலைகள் குறையவும் மத்திய அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
பணவீக்கத்தில் இருந்து சாமானிய மக்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், கோதுமை ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது சர்க்கரை விலைகள் குறையவும் மத்திய அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
முன்னதாக, கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள நிலையில், ஜூன் 1ம் தேதி முதல் சர்க்கரை ஏற்றுமதிக்கு அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. உள்நாட்டில் சர்க்கரையின் இருப்பை அதிகரித்து, விலைவாசி உயர்வைத் தடுப்பதே இதன் நோக்கம் ஆலும்.
சர்க்கரை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து நுகர்வோர் விவகார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக, சூரியகாந்தி மற்றும் சோயாபீன் எண்ணெய் இறக்குமதிக்கான சுங்க வரியை அரசு ரத்து செய்தது. இந்த முடிவினால் சமையல் எண்ணெய் விலை குறையும்.
மேலும் படிக்க | சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு வரிவிலக்கு; விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
உணவுப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், அடுத்த மாதம் முதல் சர்க்கரை ஏற்றுமதியை 100 லட்சம் மெட்ரிக் டன்னாக (LMT) கட்டுப்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
100 MLT சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி
2021-22 சர்க்கரை பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) நாட்டில் சர்க்கரையின் உள்நாட்டு இருப்பு மற்றும் விலை ஸ்திரத்தன்மையை பராமரிக்க, ஜூன் 1 முதல் சர்க்கரை ஏற்றுமதியை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை பருவத்தில் உள்நாட்டில் சர்க்கரை தடையில்லாமல் கிடைக்கவும், விலை ஏற்றத்தை தடுக்கவும், 100 LMT (லட்சம் மெட்ரிக் டன்) வரை சர்க்கரை ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
DGFT வெளியிட்ட உத்தரவின்படி, ஜூன் 1, 2022 முதல் அக்டோபர் 31, 2022 வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை, சர்க்கரை, உணவு மற்றும் பொது விநியோகத் துறை இயக்குனரகத்தின் அனுமதியுடன் குறிப்பிட்ட அளவு சர்க்கரை ஏற்றுமதி அனுமதிக்கப்படும்.
மேலும் படிக்க | IOCL M15 Petrol: இந்தியன் ஆயிலின் மெத்தனால் கலந்த மலிவு விலை பெட்ரோல்
பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், சில நாட்களுக்கு முன்பு, மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைத்தது. பெட்ரோல் விலையில் 9.50 ரூபாயும், டீசல் விலையில் 7 ரூபாயும் குறைந்தது. அதே போன்று, கோதுமை விலையை கட்டுப்படுத்தவும், சமையல் எண்ணெய் விலைகளை கட்டுப்படுத்தவும் அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
மேலும் படிக்க | பெட்ரோல் டீசல் விலை குறையுமா; நிதி அமைச்சர் கூறுவது என்ன..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR