ராஜீவ் காந்தி யுனிவர்சிட்டி ஆப் நாலெட்ஜ் டெக்னாலஜிஸ் (ஐஐஐடி-ஸ்ரீகாகுளம்) என்ற கல்வி நிறுவனத்தில் படிக்கும் 16 வயது மாணவி, தனது விருப்பத்திற்கு மாறாக ஆப்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ளும்படி பெற்றோரால் வற்புறுத்தப்பட்டதால், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். புதன்கிழமையன்று மின்விசிறியில் மாணவியின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உயிரிழந்த மனீஷா அஞ்சு, ஐஐஐடி-ஸ்ரீகாகுளத்தில் முதலாம் ஆண்டு மாணவி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் கல்வியாண்டின் தொடக்கத்தில் இருந்து ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொண்டு வந்த நிலையில், கோவிட் பாதிப்புகள் குறையத் தொடங்கிய நிலையில், ​​இனி  மாணவர்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பை நிர்வாகம் வழங்கியது. 


மேலும் படிக்க | உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் திருமணத்தில் 13 பெண்கள் பரிதாப சாவு


கல்லூரி மாணவி  மனீஷா, தனது ஆன்லைன் வகுப்புகளைத் தொடர விரும்பிய நிலையில், அவரது பெற்றோர் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள கல்லூரி செல்லுமாறு வற்புறுத்தியுள்ளனர், அதைத் தொடர்ந்து அவர்கள் ஸ்ரீகாகுளத்தில் உள்ள  ஐஐஐடி  கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர். பெற்றோர் வற்புறுத்தியதால், ஆத்திரமடைந்த  சிறுமி தனது செல்போனை பஸ்சில் வீசியுள்ளார். அடுத்த நாள், அவளுடைய பெற்றோர் அவளுக்கு ஒரு புதிய தொலைபேசியும் வாங்கி கொடுத்துள்ளனர்.


ஆனால், கல்லூரிக்க செல்லவதை தவிர்க்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி பலனளிக்காமல் போனதால், சிறுமி, விடுதியில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி) பிரிவு 174 (சந்தேகத்திற்குரிய மரணம்) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதியின் சப்-இன்ஸ்பெக்டர் கே.ராமு தெரிவித்தார்.


மேலும் படிக்க | தனது 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR