சரக்கு மற்றும் சேவை வரித்துறையின் (CST) பரிந்துறைகள்படி மட்டுமே மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்ற எவ்வித நிபந்தனையும் கிடையாது எனவும், அதேபோல், ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பான விவகாரங்களில் சட்டம் இயற்ற மத்திய அரசை போலவே மாநில அரசுக்கும், அதன் சட்டத்துறைக்கும் சம உரிமை உள்ளது என உச்சநீதிமன்றம் அதிரடியான தீர்பை இன்று வழங்கியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடல் சரக்குகள் மீதான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி தொடர்பாக குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம் அந்த வரியை ரத்து செய்து உத்தரவிட்டது. மாநில சட்டமன்றத்தின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி அந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


மேலும் படிக்க | காசி விஸ்வநாதர் கோவில் - ஞானவாபி மசூதி: கி.பி.1100 முதல் 2022 வரையிலான வரலாறு


இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. மத்திய மாநில அரசுகள் மற்றும் ஜிஎஸ்டி கவுன்சில் தொடர்பான வாதங்களையும், விசாரணைகளையும் ஆராய்ந்த உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, வரிவிதிப்பில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பிரத்தியேகமான அதிகாரங்கள் சட்டபூர்வமாக வழங்கப்பட்டவையாகும் என தெரிவித்துள்ளது. மேலும், அரசியல் சாசன பிரிவு 246/Aவின் படி வரி விதிப்பு விஷயங்களில் சட்டம் இயற்றுவதற்கு நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு சம அதிகாரம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது. 


அது மட்டுமின்றி, ஜிஎஸ்டி கவுன்சில் என்பது அரசியல் போட்டிகளுக்கான இடமாக மாறியுள்ளது என குற்றம் சாட்டிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஜனநாயகத்திலும், கூட்டாட்சி தத்துவத்திலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கின்றது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


மேலும் படிக்க | LPG Price: உச்சத்தை தொடும் கேஸ் சிலிண்டர் விலை; அதிர்ச்சியில் மக்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR