தமிழ்நாடு அரசை மிரட்டும் விதமாக பேசிய முன்னாள் ராணுவ கர்னல் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதால் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Meera Mithun Update: நடிகை மீரா மிதுன் பெங்களூருவில் இருப்பதாகவும், அவரை விரைந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாகவும் காவல் துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில், 50 சதவீத இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களிடம், அரசு கல்லூரி மாணவர்களிடம் வசூலிக்கும் கட்டணமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய தேசிய மருத்துவ ஆணையத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
TASMAC : டாஸ்மாக் நிறுவனம் உருவாக்கப்பட்டு 19 ஆண்டுகள் கடந்த நிலையிலும், நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுக்கு எந்த விதிகளையும் வகுக்காதது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது.
சாட்சியங்கள் மாஜிஸ்திரேட் முன்பு அளித்த வாக்குமுலங்களை மட்டுமே முக்கிய ஆவணமாக வைத்து விசாரணை நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
srimathi death : சேலம் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.
வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் தனுஷ் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றன. இதைத் எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்க்கு ஒரு சிறிய நிம்மதி கிடைத்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அளித்த புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டதாக துணை நடிகை தெரிவித்ததையடுத்து, அமைச்சருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூன்றாம் பாலினத்தவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சிறப்பு ஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலையில் கிரிவல பாதையையும், மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கும் இடத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை அமைப்பதற்கு தடை இல்லை - உயர்நீதிமன்றம்
நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் எந்த மரங்களை நடவேண்டும், நடக்கூடாது என்பதை நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தனக்கு எதிரான வருமானவரி வழக்குகளை ரத்து செய்யக்கோரி இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க காவல்துறைக்கு அவகாசம் வழங்காமல் தொடரப்பட்ட வழக்கை ரூ25 ஆயிரம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.