டெல்லி: முகமது நபிகள் குறித்து அவதூறான கருத்துகளை கூறிய நுபுர் சர்மாவை கைது செய்யக்கோரிய மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. நபிகள் நாயகம் குறித்து தொலைக்காட்சியில் அவதூறான வகையில் சர்ச்சை கருத்துகளை பேசியதாக பாஜக செய்தித்தொடர்பாளராக இருந்த நுபர் சர்மா மீது எதிர்ப்பு கிளம்பியது. மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலரும் போராட்டம் நடத்திய நிலையில், அவர் மீது வழக்குகளும் தொடரப்பட்டன. இதனையடுத்து அவர் பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், வழக்கறிஞர் அபு சோஹல் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் நுபுர் சர்மாவுக்கு எதிராக வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். நுபுர் சர்மா மீது கொடுக்கப்பட்ட புகாரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்தார்.


அந்த மனுவில்,"முகமது நபிகளுக்கு எதிராகவும், இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராகவும் அவதூறான கருத்துகளை நுபுர் சர்மா தெரிவித்துள்ளார். எனவே, இதுதொடர்பாக சுதந்திரமான, நம்பிக்கையான, சார்பில்லாத விசாரணை நடத்தப்பட வேண்டும். மேலும், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும்" எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.


மேலும் படிக்கவும்: நுபூர் சர்மாவை சரமாரியாக விளாசிய உச்சநீதிமன்றம்


மேலும், நுபுர் சர்மாவின் கருத்து இந்திய அரசியலமைப்பின் 14, 15, 21, 26, 29 ஆகிய சட்ட விதிகளுக்கும், அடிப்படை உரிமைக்கும் எதிரானது எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. நுபுர் சர்மாவின் கருத்து நாட்டில் பெரும் கௌந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் இந்தியாவின் நற்பெயரையும் கெடுத்துள்ளது கூறியுள்ளார்.


சர்மாவின் கருத்துக்கள், மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் நோக்கத்திலிருந்து விலகியுள்ளது எனவும் மதச்சார்பற்ற சிந்தனைகளின் அடிப்படையில் நிறுவப்பட்ட தேசத்தின் அடிப்படை நெறிமுறைகளை நேரடியாகத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது எனவும் மனுவில் குறப்பிடப்பட்டிருந்தது. 


இந்த மனுவை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யூயூ லலித் தலைமையிலான அமர்வு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவில் தவறு என்று ஏதுமில்லை, ஆனால், பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் எனக்கூறி இம்மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, மனுதாரர் தனது மனுவை வாபஸ் பெற்றார்.


மேலும் படிக்கவும்: நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவு தெரிவித்தவர் தலை துண்டித்துக் கொலை -பதற்றம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ