புது டெல்லி: முகமது நபி குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய பாஜகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மாவை ஆகஸ்ட் 10ம் தேதி வரை அவரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்கு சம்பந்தமாக 8 மாநிலங்கள் மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கு நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி பி பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நாடு முழுவதும் பல இடங்களில் நூபுர் சர்மாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளதால், அனைத்து வழக்கையும் டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று நூபுர் சர்மாவின் வழக்கறிஞர் நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளார். அடுத்த விசாரணையின் போது அனைத்து வழக்குகளையும் மாற்றுவது குறித்து நீதிமன்றம் பரிசீலிக்கலாம் எனத் தெரிகிறது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா ஒரு தொலைக்காட்சி விவாதத்தின் போது முகமது நபி பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இதையடுத்து இந்த விவகாரத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு பல இஸ்லாமிய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து நூபுர் சர்மா உச்ச நீதிமன்றத்தை நாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது, தனக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்.களை ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். ஆனால், உச்ச நீதிமன்றம் இதை மறுத்ததோடு, உங்களுடைய வார்த்தைகள் ஒட்டுமொத்த நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டது என உச்சநீதிமன்றம் மிக கடுமையாக சாடியது.
மேலும் படிக்க: நுபூர் சர்மாவை சரமாரியாக விளாசிய உச்சநீதிமன்றம்
இன்றைய விசாரணையின் போது, நீதிமன்றத்தின் கருத்துக்களுக்குப் பிறகு நூபூரின் உயிருக்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். அவரை கொல்ல சதித்திட்டம் தீட்டியது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. பாட்னா முதல் பாகிஸ்தான் வரை நூபுர் சர்மாவைவுக்கு கொலை மிரட்டல் வருகிறது. பாகிஸ்தானில் இருந்து ஒருவர் வந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாட்னாவில் இருந்தும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனவே முதல் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட இடத்திற்கே, மீதமுள்ள வழக்குகள் இணைக்கப்பட வேண்டும். இரண்டாவதாக, தண்டனைக்குரிய எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க உத்தரவிட வேண்டும் என நூபுர் சர்மாவின் வழக்கறிஞர் மன்வேந்திர சிங் வாதிட்டார்.
வெவ்வேறு மாநிலங்களில் பதியப்பட்ட வழக்குகளுக்காக ஒவ்வொரு நீதிமன்றத்திற்கும் சென்றால் நுபுர் ஷர்மாவின் உயிருக்கு ஆபத்து என அவரின் வழக்கறிஞர் கூறினார். இதுபோன்ற சூழ்நிலையில் ஆபத்தும் அதிகரித்துள்ளதால், உச்ச நீதிமன்றத்திடம் பாதுகாப்பு கோருகிறோம் என்று நூபுர் ஷர்மாவின் வழக்கறிஞர் கூறினார்.
அதன் பின்னர், நூபுர் சர்மா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் நூபுர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ஏன் ஒரே இடத்திற்கு மாற்றக்கூடாது என மாநிலங்கள் மற்றும் மத்திய அரசை நீதிமன்றம் கேட்டுள்ளது. இப்போது இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெறும்.
மேலும் படிக்க: ”பாரத மாதா தூக்கில் தொங்க வேண்டும்” - பம்முகிறதா பா.ஜ.க?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ