புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள நகரங்களில் முக்கியமாக பெரு நகரங்களில் கார், ஆட்டோ ஆகியவற்றின் டாக்ஸி சேவைகளை கடந்து பைக் டாக்ஸி சேவைகள் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக படித்து விட்டு வேலை தேடும் இளைஞர்கள் இத்தகைய பைக் டாக்ஸி வேலைகள்  வரப்பிரசாதமாக உள்ளது. இளைஞர்கள் பலர் இதில் இதில் இணைந்து சம்பாதித்து வருகின்றனர். வாடிக்கையாளர்களும் பைக் டாக்ஸி சேவையை பெரிது வரவேற்கின்றனர். ஏனெனில் இதில்,  கட்டணம், பயண நேரம் இரண்டும் குறைவு. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், பைக்-டாக்ஸி சேவை வழங்கும் ரேபிடோ மற்றும் உபெர் ஆகியவை இறுதிக் கொள்கை அறிவிக்கப்படும் வரை அக்ரிகேட்டர் உரிமம் இல்லாமல் தொடர்ந்து செயல்பட அனுமதித்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்தது. ஜூலை மாத இறுதிக்குள் பைக்-டாக்ஸி சேவையின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் உரிமக் கொள்கைகளை உருவாக்குவதாக உச்ச நீதிமன்றத்தில் டெல்லி அரசு உறுதியளித்துள்ளது.


நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் ராஜேஷ் பிண்டால் ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால பெஞ்ச், டெல்லி உயர்நீதிமன்றத்தில் தங்கள் மனுவை அவசரமாக விசாரிக்கக் கோருவதற்கான சுதந்திரத்தை பைக் சேவை நிறுவனங்கள் இரண்டு  வழங்கியுள்ளது. உயர் நீதிமன்றத்தின் மே 26-ம் தேதி பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துவதை பெஞ்ச் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ஜூலை இறுதிக்குள் இறுதிக் கொள்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று டெல்லி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பெஞ்ச் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க - தட்கல் ரயில் டிக்கெட் புக் பண்ணணுமா... கன்பர்ம் சீட் கிடைக்க சில டிப்ஸ் இதோ!


இறுதிக் கொள்கை வெளியிடப்படும் வரை பைக்-டாக்சி சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு எதிராக எந்த விதமான கட்டாய நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்ற உயர் நீதிமன்றத்தின் மே 26 ஆம் தேதி உத்தரவை எதிர்த்து ஆம் ஆத்மி அரசு தாக்கல் செய்த இரண்டு தனித்தனி மனுக்களை உச்ச நீதிமன்றம் பரிசீலித்து வந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம், டெல்லி அரசு தாக்கல் செய்த இரண்டு மனுக்களுக்கும் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறீப்பிடத்தக்கது.


பைக் டாக்ஸி சேவையால் மக்கள் அதிகம் பயன் பெறும் நிலையில், இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ, கார் ஓட்டுநர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் கார், ஆட்டோ போல பைக் டாக்ஸியில் பாதுகாப்பு அம்சங்களும் குறைவாகவே உள்ளதால், பாதுகாப்பு பிரச்சனைகள் உள்ளன. மேலும் பைக்-டாக்ஸி சேவையில் பயன்படுத்தப்படும் பைக்குகளும் சில நேரங்களில் சரியாக பராமரிப்பு படாத பைக்காக உள்ளதாகவும் குற்றசாட்டுகள் எழுகின்றன.


முன்னதாக, கடந்த பிப்ரவரி மாத இறுதியில், ரேபிடோ, ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களின் இருசக்கர வாகன டேக்ஸி சேவைகளுக்கு தடை விதித்து டெல்லி அரசு உத்தரவிட்டது. 1988 மோட்டார் வாகனச் சட்டம் விதிகளீன் படி, இருசக்கர வாகனத்தில் வாடகை அல்லது கட்டண அடிப்படையில் பயணிகளை ஏற்றிச் செல்வது சட்டத்தை மீறும் செயலாகும் என தெரிவிக்கப்பட்டது. 


மேலும் படிக்க - வெறும் ரூ. 5000 -க்கு iPhone 14 Pro Max: இது என்ன புது கதை!! ஜாக்கிரதை!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ