வெறும் ரூ. 5000 -க்கு iPhone 14 Pro Max: இது என்ன புது கதை!! ஜாக்கிரதை!!

iPhone 14: பல ஆன்லைன் தளங்களில் ஐபோன்களில் வழங்கப்படும் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் பற்றி அவ்வப்போது பல வித செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 12, 2023, 11:11 AM IST
  • ஐபோன் பிரியர்களுக்கு முக்கிய செய்தி.
  • ஆன்லைன் ஐபோன் சலுகைகள் - ஜாக்கிரதை.
  • ஐபோன் சலுகைகள் குறித்து ஆன்லைனில் வரும் அனைத்து விளம்பரங்களையும் நம்பி விட முடியாது.
வெறும் ரூ. 5000 -க்கு iPhone 14 Pro Max: இது என்ன புது கதை!! ஜாக்கிரதை!! title=

ஐபோன் பிரியர்களுக்கு முக்கிய செய்தி!! ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் போனுக்கு மக்களிடையே அதிக க்ரேஸ் உள்ளது. இதன் விலை காரணமாக இதை பலர் வாங்க தயங்கினாலும், இதில் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் கிடைக்கும்போது மக்கள் இதை வாங்க அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறார்கள். இதன் விலை குறைய குறைய இதனை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகின்றது. பல ஆன்லைன் தளங்களில் ஐபோன்களில் வழங்கப்படும் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் பற்றி அவ்வப்போது பல வித செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன. 

ஆன்லைன் ஐபோன் சலுகைகள் - ஜாக்கிரதை

ஐபோன் சலுகைகள் குறித்து ஆன்லைனில் வரும் அனைத்து விளம்பரங்களையும் நம்பி விட முடியாது என்பதை வாடிகையாளர்கள் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். உயர்தர ஐபோன் மலிவாகக் கிடைக்கும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை நீங்கள் கண்டால், உடனே அதை வாங்க எண்ணாமல், சற்று நிதானமாக யோசித்து பின்னர் செயல்படுங்கள். இந்த பதிவுகள், அதிக மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்களுக்கான ஆரம்பகட்ட சலுகை என்ற பெயரில் பயனர்களை ஏமாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன என்று நம்பப்படுகிறது. சிறிது நேரம் கழித்து இந்த பதிவுகள் மறைந்துவிடும். சமீபத்தில், விலை உயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்களை வாங்குபவர்களை ஏமாற்றி கொள்ளையடிக்கும் இதுபோன்ற மோசடி நபர்களை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

IANS இன் அறிக்கையின்படி, ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையில், இறுதியாண்டு படிக்கும் மாணவர் உட்பட இரண்டு சைபர் குற்றவாளிகளை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. இந்த குற்றவாளிகள் மலிவான எலக்ட்ரானிக் கேஜெட்களைக்கொண்டு சமூக ஊடகங்கள் மூலம் பலரை ஏமாற்றி வருகின்றனர். இந்த வழக்கு சமூக நீதிக்கு மிகவும் முக்கியமானது. இதன் காரணமாக அகிலேஷ் குப்தா உடனடியாக இந்திய தண்டனைச் சட்டம் 420 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்.

போலீஸ் துணை கமிஷனர் (வெளி வடக்கு), ரவி குமார் சிங், முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, புகார்தாரர் மோசடி வாக்குறுதிகளை அளித்த முறையான சைபர் வளையத்தின் கூற்றுகளுக்கு பலியாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். விசாரணையுடன், இன்டர்நெட் புரோட்டோகால் விவரப் பதிவை (IPDR) போலீசார் பகுப்பாய்வு செய்து, பானிபட்டில் மோசடி செய்பவர்களின் பண மோசடி விவரங்களை வெற்றிகரமாகக் கண்டுபிடித்தனர்.

மேலும் படிக்க | இவ்வளவு கம்மி விலையில் ஏசியா? விலையை கேட்டால் உடனே வாங்கிடுவீங்க!

தேடுதல் நடவடிக்கையின் போது, ​​குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று மொபைல் போன்களை வைத்திருந்த ராகவ்வை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு ஆர்யன் என்ற மற்றொரு நபரும் நாலந்தாவில் உள்ள தேவி சராய் என்ற இடத்தில் கைது செய்யப்பட்டார். விசாரணையில், ராகவ் டெலிகிராமில் போலி சிம் குழுவை இயக்கி சந்தா செலுத்தியது தெரியவந்தது. குழுவிற்குள், அவர் பல்வேறு மோசடி நுட்பங்களைக் கற்றுக்கொண்டார் . மேலும் க்ளாஷ்னிக் என்ற நபரைச் சந்தித்து, விலையுயர்ந்த கேட்ஜெட்களை குறைந்த விலையில் விற்கும் கலையை அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.

அதன் பிறகு, ராகவ் "gadget.world" என்ற ஐடியின் கீழ் ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கினார். அங்கு அவர் நேர்மறையான மதிப்புரைகள் (பாசிடிவ் ரெவ்யூ) மற்றும் மொபைல் போன்களை அன்பாக்ஸ் செய்யும் வாடிக்கையாளர்களின் வீடியோக்களை வெளியிட்டார். சிறந்த சேவையின் மாயையை வழங்குவதற்காக திருப்தியான வாடிக்கையாளர் தொடர்புகளின் ஸ்கிரீன் ஷாட்களையும் உருவாக்கினர். indiansmartpanel.com மூலம் ராகவ் அந்த பக்கத்திற்கு போலி ஃபாலோயர்களையும் வாங்கினார். 

ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஐ 5 ஆயிரம் ரூபாய்க்கு கிடைப்பதாகக் கூறப்படும் பக்கத்தில் இதுபோன்ற பல இடுகைகள் இருந்தன. ஆனால் இவை போலியான போன்கள். டெல்லி காவல்துறையின் உடனடி நடவடிக்கை மற்றும் விசாரணையின் விளைவாக இந்த இணைய குற்றவாளிகள் கிஅது செய்யப்பட்டார்கள். அவர்களின் மோசடி நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.

மேலும் படிக்க | Oppo vs OnePlus - இந்த 2 ஸ்மார்ட்போன்களில் எது சிறந்தது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News