Arvind Kejriwal Bail, Supreme Court: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று (ஏப்ரல் 29, திங்கள்கிழமை) முக்கியமான நாளாக இருக்கும். டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் முக்கிய விசாரணை நடைபெறவுள்ளது. உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவாலுக்கு இன்று நிவாரணம் கிடைக்குமா என்பதுதான் கேள்வி. அனைவரின் பார்வையும் இன்றைய விசாரணையின் மீது உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்குமா?


மதுபான கலால் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.


சுனிதா கெஜ்ரிவாலுக்கு அனுமதி மறுப்பு 


இந்நிலையில், சுனிதா கெஜ்ரிவாலை சிறையில் உள்ள கணவரை சந்திக்க திகார் சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன. சுனிதா கெஜ்ரிவால் இன்று சிறையில் கெஜ்ரிவாலை சந்திக்க அனுமதி கோரியிருந்தார். ஆனால், அனுமதி மறுத்ததற்கான காரணத்தை சிறை நிர்வாகம் தெரிவிக்கவில்லை. திகார் சிறை கைதி விதியின்படி, ஒரு கைதி ஒரு நேரத்தில் இரண்டு பேரையும், ஒரு வாரத்தில் அதிகபட்சமாக நான்கு பேரையும் சந்திக்க முடியும்.


திகார் சிறை நிர்வாகம் என்ன சொன்னது?


ஆனால் ஊடகங்களில் திகார் சிறை நிர்வாகம் தரப்பில் கூறியதாக வெளியான செய்தியில், "அரவிந்த் கெஜ்ரிவாலை வாரத்தில் இரண்டு முறை மட்டுமே சிறையில் சந்திக்க முடியும். இதுபோன்ற சூழ்நிலையில், ஏற்கனவே திட்டமிட்டபடி, முதல்வர் கெஜ்ரிவால் இன்று (ஏப்ரல் 29, திங்கள்கிழமை) அமைச்சர் அதிஷியையும், நாளை (ஏப்ரல் 30, செவ்வாய்கிழமை) பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானையும் சந்திக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இந்த வாரம் சுனிதா கெஜ்ரிவால் தனது கணவரை (அரவிந்த் கெஜ்ரிவால்) சந்திக்க அனுமதிக்கப்படவில்லை எனக் சிறை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


மேலும் படிக்க - சிறையில் இருக்கும் கெஜ்ரிவாலை அவரது மனைவி ஏன் சந்திக்க முடியவில்லை?


இன்று அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்கும் டெல்லி கேபினட் அமைச்சர் அதிஷி


இந்நிலையில், டெல்லி கேபினட் அமைச்சர் அதிஷி இன்று (திங்கள்கிழமை) மதியம் 12:30 மணிக்கு அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க உள்ளார். இதற்கிடையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், டெல்லி முதல்வரை நாளை (செவ்வாய்க்கிழமை) சந்திக்கிறார். திகாரில் கெஜ்ரிவாலுடன் மான் நடத்தும் இரண்டாவது சந்திப்பு இதுவாகும்.


திகார் சிறை நிர்வாகம் வேண்டுமென்றே ரத்து செய்துள்ளது -ஆம் ஆத்மி


இதற்கிடையில், அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சுனிதா கெஜ்ரிவால் சந்திப்பை திகார் சிறை நிர்வாகம் எந்த தகவலையும் தெரிவிக்காமல் ரத்து செய்துள்ளதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இந்த சந்திப்பை வேண்டுமென்றே திட்டமிட்டு ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. நாங்கள் அதிஷியுடன் சுனிதாவின் பெயரையும் திகார் நிர்வாகத்திற்கு அஞ்சல் மூலம் அனுப்பியிருந்தோம், ஆனால் சிறை நிர்வாகம் சுனிதாவின் சந்திப்பை மட்டும் ரத்து செய்துள்ளது என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.


திகார் சிறையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்


டெல்லியில் நடந்த மதுபான ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. ஆனால், ஒரு முறை கூட அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை எனவே அமலாக்கத் துறை அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 21 அன்று கைது செய்தது. தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் உள்ளார்.


மேலும் படிக்க - ஜாமீனுக்காக சுகர் லெவலை எகிற வைக்க கெஜ்ரிவால் முயற்சி: அமலாக்கத் துறை பகீர் குற்றச்சாட்டு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ