புதுடெல்லி: தமிழகத்தில் காளைகளை அடக்கும் விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்த தமிழக சட்டத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் (தமிழ்நாடு திருத்தம்) 2017, விலங்குகளுக்கு ஏற்படும் வலியையும் துன்பத்தையும் கணிசமாகக் குறைக்கிறது என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜல்லிக்கட்டு, கம்பாளா, மாட்டு வண்டி பந்தயம் போன்ற விலங்கு விளையாட்டுகளை நடத்த அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் மத்திய சட்டத்தில் கொண்டு வரப்பட்ட மாநிலத் திருத்தங்களின் அரசியலமைப்பு செல்லுபடியை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது.  


ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழ்நாடு அரசு அளித்துள்ள ஆவணங்கள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளதாக உச்சநீதி மன்ற நீதிபதிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.


குறிப்பாக தமிழ்நாட்டின் கலாச்சாரத்துடன் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைந்த பகுதி கலாச்சாரம் என்பது ஜல்லிக்கட்டு கலாச்சாரம் என்பது தமிழ்நாட்டின் உடைய பாரம்பரியங்களில் ஒன்றாக இருக்கக்கூடியது நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த கலாச்சாரம் என்பது கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.


மேலும் படிக்க | Post Office RD Scheme: ரூ.100 போட்டால் போதும், அட்டகாசமான லாபம்


நீதிபதிகளின் கருத்து


ஜல்லிக்கட்டை அனுமதிப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு கொடுத்த  ஆவணங்கள் ஆதாரங்கள் அனைத்தும் திருப்தி அளிக்கும் வகையில் எங்களுக்கு இருக்கிறது  என நீதிபதிகள் தெரிவித்தனர்.


தமிழ்நாடு அரசு ஜல்லிக்கட்டு எப்படி அனுமதிக்கும் வகையில் சட்ட திருத்தத்தை கொண்டு வந்தார்களோ அந்த அடிப்படையில் மகாராஷ்டிரா உள்ளிட்ட மற்ற மாநில அரசுகளும் தங்களது மாநிலங்களில் சட்டத்திருத்தங்களை கொண்டு வருவதற்கான வழிவகைகளையும் இந்த தீர்ப்பின் மூலமாக உச்சநீதிமன்றம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்ற ஒரு விஷயத்தையும் சொல்லி இருக்கிறார்கள் 


இவை அனைத்தையும் தாண்டி வேறு சில தவறான விஷயங்கள் இருந்தால் அதனை சரி செய்ய வேண்டிய பொறுப்பும் இருக்கிறது என தெரிவித்த அரசியல் சாசன அமர்வு நீதிபதிகள், ஜல்லிக்கட்டு இனிமேல் தமிழ்நாட்டுடைய கலாச்சாரத்தின் அங்கம் என்பதை உறுதி செய்தனர்


ஜல்லிக்கட்டு என்பது ஒரு சில குறிப்பிட்ட குழுக்களால் மட்டுமே நடத்தப்படுகிறது. அதற்கும் தமிழர்களின் கலாச்சாரத்திற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை எனவே இதனை ஏற்கக்கூடாது என்பதே பீட்டா உள்ளிட்ட அமைப்புகளின் அடிப்படையான வாதமாக இருந்தது


இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைகளை வழங்கக்கூடிய ஆர்ட்டிகள் 14 மற்றும் 21 ஆகியவற்றை மீறும் வகையில் தமிழக அரசின் சட்ட திருத்தம் இல்லை என்பதை உறுதி செய்த உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசனம் அமர்வு, இந்த சட்ட திருத்தத்தில், மாநில சட்டமன்றம் ஒரு விவகாரத்தில் சட்டம் ஏற்றுவதற்கான அதிகாரத்தை மீறும் வகையில் எந்த விஷயமும் இல்லை என தெரிவித்தது


மேலும் படிக்க | ஜல்லிக்கட்டு வழக்கில் இன்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு!


தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, கர்நாடகாவில் கம்பளா, மகாராஷ்டிராவில் சக்கடி ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளை நடத்த அந்தந்த மாநில அரசுகள் சிறப்பு சட்டங்களை இயற்றியுள்ளன. இந்த சட்டங்களுக்கு எதிராகவும், விலங்குகளை மையமாகக் கொண்ட விளையாட்டுகளுக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.


நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதில், 5 ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டு கலாச்சாரத்தின் முக்கிய அம்சம் என்றும், கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தையும், நாட்டு மாடு இனங்களை பாதுகாக்கவுமே ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது.


2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு மற்றும் இதே போன்ற நடவடிக்கைகளுக்கு தடை விதித்த பிறகு, இந்திய விலங்குகள் நல வாரியம் எதிராக ஏ. நாகராஜா அண்ட் ஆர்ஸ் வழக்கில் இந்த திருத்தங்கள் மாநிலங்களால் நிறைவேற்றப்பட்டன.


இன்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இந்தியாவின் கலாச்சார வீர விளையாட்டுகளுக்கு கிடைத்த வெற்றி என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.


மேலும் படிக்க | உச்ச நீதிமன்றம் & கொலீஜியம் குறித்த சர்ச்சைக் கருத்து! கிரண் ரிஜுஜூ இலாகா மாற்றம்


ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக அரசின் அவசரச் சட்டம்
அதே ஆண்டு, மத்திய சட்டத்தில் திருத்தம் செய்து மாநிலத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து அரசாணையை அரசாங்கம் வெளியிட்டது; இந்த ஆணையை எதிர்த்த PETA , இது அரசியலமைப்பிற்கு எதிரானது என்று வாதிட்டது.


ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு தடை 


தமிழக அரசு, 2009ல் ஜல்லிக்கட்டு தொடர்பான சட்டத்தை இயற்றியதன் மூலம், தடையில் இருந்து வெளியேறியது. 2011 ஆம் ஆண்டு, மத்திய அரசு, காளைகளை பயிற்சி மற்றும் கண்காட்சி தடைசெய்யப்பட்ட விலங்குகளின் பட்டியலில் சேர்த்தது. மே 2014 இல் போடப்பட்ட ஒரு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்தது, அதில் 2011 அறிவிப்பை மேற்கோள் காட்டி தீர்ப்பளித்தது.


2017 தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம்
ஒரு வருடம் கழித்து, 2015 இல், உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை திரும்பப் பெறக் கோரிய தமிழக அரசின் மனுவையும் தள்ளுபடி செய்தது. 2017 ஜனவரியில், ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்தன, சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டம் உலகம் முழுவதும் பிரபலமானது.  


மேலும் படிக்க | புதிய முதல்வர் யார்..? 48 முதல் 72 மணி நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சுர்ஜேவாலா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ