இந்தியாவின் சராசரி GDP பாஜக ஆட்சியில் தான் அதிகமானது -சுஷ்மா!
காங்கிரஸ் ஆட்சியில் 6.7%-ஆக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி பாஜக ஆட்சி காலத்தில் 7.3% உயர்ந்துள்ளது என வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்!
காங்கிரஸ் ஆட்சியில் 6.7%-ஆக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி பாஜக ஆட்சி காலத்தில் 7.3% உயர்ந்துள்ளது என வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்!
மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் செய்தியாளர் சந்திப்பில் தெரவிக்கையில்... ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இந்திய பொருளாதாரம் பலவீன நிலையில் இருந்தது என சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கி ஆகிய இரண்டும் பட்டியலிட்டு இருந்தது. காங்கிரஸ் கட்சியின் 10 ஆண்டுகால ஆட்சியில் 6.7%-ஆக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி பாஜக ஆட்சி காலத்தில் 7.3% உயர்ந்துள்ளது.
பொருளாதாரம் வீழ்ச்சி நிலையில் உள்ள பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்று இருந்தது என முன்னாள் நிதி மந்திரி சிதம்பரத்திற்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தற்போது பாஐக ஆட்சி நடைப்பெற்று வரும் நிலையில் இன்று சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கி என இரு அமைப்புகளும் இந்தியாவை பொருளாதாரத்தில் வேகமுடன் வளர்ந்து வரும் நாடு என குறிப்பிட்டு வருகின்றன என தெரிவித்தார்.
தொடர்ந்து தனது அரசியல் பங்கேற்பு பற்றி பேசிய அவர் 'தன் உடல் நலமாகவே உள்ளது எனவும், எனினும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டி அவசியம் இருக்கின்றது' எனவும் குறிப்பிட்டார். மேலும் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தன்னை கேட்டுகொண்டதால், தூசி மற்றும் மாசுகளை தவிர்க்க தான் தேர்தல் பிரச்சாரங்களில் பங்கேற்பதில்லை என தெரிவித்தார்.