இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக சுவாமிநாதன் ஜானகிராமனை மத்திய அரசு நியமித்தது. தற்போது ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பதவி வகிக்கும் மகேஷ் குமார் ஜெயின் பதவிக்காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் முடிவடைகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால் மத்திய அரசு, பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக இயக்குநராக இருக்கும் சுவாமிநாதன் ஜானகிராமனை மகேஷ் குமார் ஜெயினின் பதவிக்கு நியமிப்பதாக செவ்வாய்க்கிழமை (2023 ஜூன் 20) அறிவித்தது.



மகேஷ் குமார் ஜெயின் ஜூன் 2018 இல் மூன்று ஆண்டுகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், மேலும் இரண்டு வருட காலத்திற்கு ஜூன் 2021 இல் பதவி நீட்டிக்கப்பட்டது. 


தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் சுவாமிநாதன் ஜானகிராமன், சில்லறை மற்றும் கார்ப்பரேட் வங்கி (Retail and Corporate Banking), சர்வதேச வங்கி, வர்த்தக நிதி, தொடர்பு வங்கி & FI தயாரிப்புகள், டிஜிட்டல் வங்கி மற்றும் பரிவர்த்தனை வங்கி தயாரிப்புகளில் கள நிபுணத்துவம் கொண்ட வங்கியாளர் ஆவார்.


மேலும் படிக்க | உங்கள் பாக்கெட்டில் இருக்கும் ₹100 கள்ள நோட்டு இல்லையே... கண்டறிவது எப்படி!


தற்போது எஸ்பிஐயின் கார்ப்பரேட் பேங்கிங் மற்றும் துணை நிறுவனங்களை நிர்வகிக்கும் பொறுப்பு வகிக்கிறார் சுவாமிநாதன் ஜானகிராமன். இதற்கு முன்பு அவர், வங்கியின் இடர் மேலாண்மை, ஒழுங்குமுறை இணக்கம் தொடர்பான பணிகளை மேற்கொண்டு வந்தார்.


பட்ஜெட் மற்றும் செயல்திறன் கண்காணிப்பு, மூலதன திட்டமிடல் மற்றும் முதலீட்டாளர் உறவுகளை மேற்பார்வையிடும் எஸ்பிஐக்கான நிதிச் செயல்பாட்டை ஜானகிராமன் கையாண்டார். அவர் டிஜிட்டல் வங்கியின் தலைவராக எஸ்பிஐயின் டிஜிட்டல் மாற்றப் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளார்.


ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வாரியத்தில் முழு நேர இயக்குநராக, கார்ப்பரேட் வங்கி மற்றும் துணை நிறுவனங்களை மேற்பார்வையிடுகிறார்.


மேலும் படிக்க | ₹500 கள்ள நோட்டை அடையாளம் காணுவது எப்படி... RBI வெளியிட்டுள்ள வழிமுறைகள்!


யெஸ் பேங்க், ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி மற்றும் என்பிசிஐ மற்றும் பேங்க் ஆஃப் பூட்டான், எஸ்பிஐ ஜேவி வாரியங்களில் எஸ்பிஐயின் நியமன இயக்குநராக பணியாற்றினார். சப்சிடியரீஸ் தலைவராக, மியூச்சுவல் ஃபண்ட், இன்சூரன்ஸ், இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங், ப்ரோக்கிங், பென்ஷன் ஃபண்ட்ஸ், பிரைவேட் ஈக்விட்டி போன்ற துறைகளில் வங்கியின் பல வங்கி அல்லாத துணை நிறுவனங்களில் தற்போது வங்கியின் நியமன இயக்குநராக உள்ளார்.


ஜூன் 2018 இல் தற்போது வரை ஐந்தாண்டுகளாக ரிசர்வ் வங்கியின் துணைநிலை ஆளுநராக பதவி வகிக்கும் மகேஷ் குமார் ஜெயின், ரிசர்வ் வங்கி மேற்பார்வை, நிதி உள்ளடக்கம் மற்றும் மேம்பாடு, நுகர்வோர் கல்வி மற்றும் பாதுகாப்பு துறையின் பொறுப்பாளராக உள்ளார். 


ஆனால், சுவாமிநாதன் ஜானகிராமனுக்கும் இதே பொறுப்புகள் கொடுக்கப்படுமா என்பது தொடர்பாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஏனெனில், துணை நிலை ஆளுநர் இலாகாக்களில், அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலையில் 2 ஜாக்பாட் செய்திகள் கிடைக்கும், காத்திருக்கும் ஊழியர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ