வடகிழக்கு மாநிலமான அசாம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் திங்கட்கிழமையன்று உயிரிழந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த தருண் கோகோய், கோவிட்-19 நோயில் இருந்து மீண்டுவிட்டாலும், கொரோனாவின் தாக்கத்தால் ஏற்பட்ட உடல்நிலை சீர்குலைவு சரியாகவில்லை.  கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்காக சிகிச்சை பெற்று வந்த தருண் கோகாய், கடந்த அக்டோபர் மாதம் 25ந்தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 


மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதன் காரணமாக, மீண்டும் தருண் கோகாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் அவரது உடல்நிலை "மிகவும் மோசமாக" இருப்பதாக நேற்று தெரிவித்தனர். 


82 வயது தருண் கோகோய் மூன்று முறை மாநில முதலமைச்சராக இருந்தவர். தருண் கோகோயின் மரணத்தை அசாம் மாநில சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உறுதி செய்தார்.  


மறைந்த முன்னாள் முதல்வரின் மனைவி டோலி, மகள் சந்திரிமா, மகன் கெளரவ் என குடும்பத்தார் அனைவருக்கும் பல தலைவர்களும் இரங்கல் செய்திகளை அனுப்பியுள்ளனர்.  


கோகோயின் மரணம் குறித்து தனது "வேதனையை" வெளிப்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி "பிரபலமான தலைவர் மற்றும் ஒரு மூத்த நிர்வாகி" என்று குறிப்பிட்டு இரங்கல் செய்தி வெளியிட்டார்.  



"தருண் கோகோய் ஒரு பிரபலமான தலைவராகவும், ஒரு மூத்த நிர்வாகியாகவும் இருந்தார், அவர் அஸ்ஸாம் மற்றும் மத்திய அரசில் பல ஆண்டு அரசியல் அனுபவங்களைப் பெற்றவர். அன்னாரின் மறைவு அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சோகத்தின் பிடியில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என இந்திய பிரதமர் தனது ட்விட்டர் கணக்கில் இரங்கல் செய்தியை பதிவு செய்துள்ளார். 



குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும் முன்னாள் முதல்வருக்கு அஞ்சலி செலுத்தினர்.



"அசாமின் முன்னாள் முதலமைச்சர் ஸ்ரீ தருண் கோகோயின் மறைவை அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். ஆழ்ந்த அரசியல் மற்றும் நிர்வாக அனுபவமுள்ள ஒரு மூத்த தலைவரை நாடு இழந்துள்ளது. அவரது நீண்ட பதவிக் காலம் அசாமின் சகாப்த மாற்றத்திற்கான ஒரு காலகட்டம்" என்று குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ட்விட்டரில் எழுதியுள்ளார்.



தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும்  இப்போது தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR