ஹைதராபாத்: தெலுங்கானாவில் 119 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 30ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. 71 சதவீத ஓட்டுகள் பதிவான நிலையில் இன்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இங்கு தனித்து ஆட்சியமைக்க 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில்,  காங்கிரஸ் கட்சி 62 தொகுதிகளில்  வெற்றி பெற்று 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பிஆர்எஸ் கட்சி 37 தொகுதிகளில் வெற்றி பெற்று 2 இடங்களீல் முன்னிகையில் உள்ளது, பாஜக 8 தொகுதிகளிலும், மற்றவர்கள் 8 தொகுதிகளிலும் வெற்றிகளை பெற்றுள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் தனித்து ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள போதிலும், தெலுங்கானாவின் தற்போதைய முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் மற்றும் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் ரேவந்த் ரெட்டி ஆகிய இருவரையும் காமரெட்டி சட்டமன்றத் தொகுதியில் தோற்கடித்து பாஜக வேட்பாளர் வெங்கட் ரமண ரெட்டி "மாபெரும் வெற்றி" பெற்று முக்கிய தலைவராக உருவெடுத்துள்ளார். 2018 இல், தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) சார்பில் கம்ப கோவர்தன் இந்திய தேசிய காங்கிரஸின் முகமது அலி ஷபீரை விட 2.83% வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சி முதல் முறையாக தெலங்கானா மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ளது. இதனை சாத்தியமாக்கி கொடுத்தவர் தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரேவந்த் ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது. 


காமரெட்டி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2023: பாஜகவின் கேவி ரமண ரெட்டி முதல்வர் கேசிஆர் மற்றும் காங்கிரஸின் ரேவந்த் ரெட்டியை தோற்கடித்தார்.
காமரெட்டி நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கியமான தொகுதியாகும், இது நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள்தொகையின் கலவையாக அறியப்படுகிறது. நவம்பர் 30, 2023 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.


மேலும் படிக்க | பிரதமர் மோடியே வெற்றிக்கு காரணம்! காரணங்களை அடுக்கும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்


இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில், "இந்தியா கூட்டணியில் உள்ளவர்களுக்கு.. தோல்வியை நேர்மையாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத, வடக்கு- தெற்குப் பிரிவினையைப் பிரச்சாரம் செய்வதில் மும்முரமாக இருக்கும் இந்தியா கூட்டணிக் கட்சியினரே, தயவு செய்து கட்டிப்பள்ளி வெங்கட் ரமண ரெட்டி காருவை பாருங்கள். காமாரெட்டி தொகுதியின் பாஜக வேட்பாளர் கட்டிப்பள்ளி வெங்கட் ரமண ரெட்டி, தெலுங்கானாவில் தற்போதைய முதல்வர் கே சந்திரசேகர் ராவ் மற்றும் தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி ஆகியோரை தோற்கடித்துள்ளார்." எனக் குறிப்பிட்டு அவரது புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.


தெலங்கானா மாநிலம் கடந்த 2014ஆம் ஆண்டில் மத்திய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உதயமானது. ஒன்றிணைந்த ஆந்திராவில் இருந்து பிரிக்கப்பட்ட இந்த பகுதிகளுக்கு அன்றைய மக்களவை தேர்தலின்போதே சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.


மேலும் படிக்க | Rajasthan Election Results 2023: காங்கிரஸ் வென்றால்... முதல்வர் பதவி யாருக்கு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ