மேலும் ஒரு 15 நாள் ஊரடங்கு விதிக்கப்படலாம்; தெலுங்கான முதல்வர் தகவல்...
மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை 12000-ஐத் தாண்டியுள்ள நிலையில், தெலுங்கானா அரசு மேலும் 15 நாட்களுக்கு மற்றொரு ஊரடங்கை அறிவிக்க கூடும் என மாநில முதல்வர் ஞாயிற்றுக்கிழமை சுட்டிக்காட்டியுள்ளார்.
மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை 12000-ஐத் தாண்டியுள்ள நிலையில், தெலுங்கானா அரசு மேலும் 15 நாட்களுக்கு மற்றொரு ஊரடங்கை அறிவிக்க கூடும் என மாநில முதல்வர் ஞாயிற்றுக்கிழமை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹைதராபாத்தில் பிரகதி பவனில் மறுஆய்வுக் கூட்டத்தை நடத்தியபோது, முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், அமைச்சரவை மூன்று அல்லது நான்கு நாட்களில் கூடி இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ | அதிர்ச்சி தகவல்... வயிற்று வலியால் தான் ஆண் என்பதை உணர்ந்த மணமான பெண்..!!!
"இரண்டு மூன்று நாட்களுக்கு நிலைமையை தீவிரமாக ஆராய்வோம். தேவைப்பட்டால், முழு அடைப்பு மாற்று வழிகள் மற்றும் பிற தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து விவாதிப்போம். மூன்று முதல் நான்கு நாட்களில் மாநில அமைச்சரவை கூட்டப்பட்டு இதுதொடர்பாக ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கும் என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், 15 நாட்களுக்கு மாநிலத்தில் ஊரடங்கு அமுல் செய்வது குறித்து மருத்துவ சகோதரர்களின் பரிந்துரைகளை பெறவிருப்பதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே ஹைதராபாத்தில் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்துவது நல்லது என்று மருத்துவ மற்றும் சுகாதார துறைகள் முன்மொழிந்துள்ளன. ஆனால் முழுஅடைப்பை மீண்டும் திணிப்பது அரசின் மிகப் பெரிய முடிவாக இருக்கும். இதற்கு அரசாங்க இயந்திரங்களும் மக்களும் தயாராக இருக்க வேண்டும் என்று மருத்துவ அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளது.
ALSO READ | லடாக் விவகாரத்தில் வலுக்கும் போராட்டம்; Zomato சீருடையை கிழித்தெறியும் ஊழியர்கள்...
மாநில அரசின் மருத்து புல்லட்டின் படி வெள்ளிக்கிழமை மாநிலத்தில் 985 புதிய தொற்றுகள் மற்றும் ஏழு இறப்புகள் பதிவாகியுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 12,349-ஆகவும், இறப்புகள் 237-ஆகவும் அதிகரித்துள்ளது.
புதிதாக பதிவான 985 தொற்றுகளில், 774 கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சியில் (GHMC) பதிவாகியுள்ளன, அதனைத் தொடர்ந்து ரங்கா ரெட்டி மாவட்டம், 86 தொற்றுகளை பதிவு செய்துள்ளது.