கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு டெல்லி அரசு ரூ.10 கோடி, தெலங்கானா அரசு ரூ.25 கோடி நிதியுதவி  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவில், கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக வரலாறு கன மழை பெய்து வருகிறது. கனமழையின் காரமாக கேரளா மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால், மின்சாரம், போக்குவரத்து, உணவு, இருப்பிடம் போன்ற அனைத்து அத்தியாவசியத் தேவைகளிலும் சிக்கி கேரளா தவித்துவருகிறது. 


கேரளாவில் உள்ள 27 அணைகளும் திறந்துவிடப்பட்டுள்ளன. சுமார் 26 வருடங்களுக்குப் பிறகு, இடுக்கி அணையின் 5 மதகுகளும் திறக்கப்பட்டுள்ளன. கேரளாவை வெள்ளம் சூழ்ந்து இரண்டு வாரங்களைக் கடந்துவிட்ட நிலையிலும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது.


கனமழையின் காரணமாக இதுவரை 324-க்கும் மேற்ப்பட்டோர் பலியாகியுள்ளனர் என கேரளா முதலவர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கடந்த 94 வடங்களில் இல்லாத பேரழிவைத் தற்போது கேரளா சந்தித்துவருகிறது. நிலச்சரிவு, மழை, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். அனைத்துப் பகுதிகளிலும் மீட்புப்பணிகளும் நிவாரணப் பணிகளும் முழுவீச்சில் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. 


இந்நிலையில் பேரழிவை சந்தித்திருக்கும் கேரள மாநிலத்திற்கு பலரும் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். அந்த வகையில் 
கேரளா வெள்ள நிவாரண நிதியாக தெலங்கானா அரசு ரூ.25 கோடி வழங்கியது. மேலும், கேரள மாநிலத்துக்கு டெல்லி அரசு ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்கியுள்ளது.