ஹைதராபாத்: தெலுங்கானாவில் (Telangana) பெய்த கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஹைதராபாத் (Hyderabad) மற்றும் மாநிலத்தின் சில பகுதிகளில் இடைவிடாத மழை பெய்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹிமாயத் நகர், பஷீர்பாக், நாம்பள்ளி, லக்கி கா புல், மெஹ்திபட்னம், டோலி சௌகி, கச்சிபவுலி, ஜூபிலி ஹில்ஸ் மற்றும் பஞ்சாரா ஹில்ஸ் ஆகிய இடங்களில் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழை நீர் தேங்கி இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.


இதுவரை பெய்த மழையால் தெலுங்கானாவில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர். ஹைதராபாத்தில் கனமழை பெய்ததைத் தொடர்ந்து, பாண்ட்லகுடாவில் முகமதிய ஹில்ஸ் பகுதியில் எல்லைச் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை உட்பட 9 பேர் நசுங்கி உயிர் இழந்தனர்.


"நான் பாண்ட்லகுடாவின் முகமதிய ஹில்ஸில் பகுதியில் ஒரு ஸ்பாட் இன்ஸ்பெக்ஷனில் இருந்தேன். அங்கு ஒரு தனியார் சொத்தின் எல்லைச் சுவர் விழுந்து 9 பேர் இறந்தனர், இருவர் காயமடைந்தனர். நான் அங்கிருந்து திரும்பி வந்தபோது, ஷம்ஷாபாத்தில் சிக்கித் தவித்த பஸ் பயணிகளுக்கு லிப்ட் கொடுத்தேன். இப்போது நான் தலப்கட்டா மற்றும் எஸ்ரப் நகருக்கு சென்றுகொண்டிருக்கிறேன்” என ஹைதராபாத் மக்களவை எம்.பி. அசாதுதீன் ஒவைசி ட்வீட் செய்துள்ளார்.


போலீசின் கூற்றுப்படி, இப்ராஹிம்பட்டனம் பகுதியில் மழையால் இருவர் உயிர் இழந்தது தெரிய வந்துள்ளது. அங்கு ஒரு பெண்ணும் அவரது 15 வயது மகளும் அவர்களது பழைய வீட்டின் கூரை இடிந்து விழுந்ததால் இறந்தனர்.


மாநிலத்தில் அதிக மழை பெய்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு தெலுங்கானா தலைமைச் செயலாளர் சோமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.


குமார் அதிகாரிகளுக்கு அனுப்பிய செய்தியில் கூறியதாவது: "மாநிலத்தின் நிலைமை குறித்து முதலமைச்சர் விசாரித்தார். ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். பலத்த மழை மாநிலத்தை தாக்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஹைதராபாத்தில் பல பகுதிகளில் 20 செ.மீ மழை பெய்துள்ளது. பல விரும்பத்தகாத சம்பவங்கள் பதிவாகியுள்ளன."


அக்டோபர் 15 ஆம் தேதி வரை தெலுங்கானாவின் சில பகுதிகளில் அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.


ஆழ்ந்த காற்றழுத்தத்தின் காரணமாக, ஆந்திரா, ஒடிசா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் அக்டோபர் 13 ஆம் தேதி அதிக மழை பெய்தது.


ALSO READ: DMK தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது


சமீபத்திய IMD செய்திக்குறிப்பின் படி, தெலுங்கானாவின் மேலிருந்த காற்றழுத்தம் மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் 25 கிமீ வேகத்தில் தெலுங்கானாவின் மேற்கு பகுதிகளை மையமாகக் கொண்டு நகர்ந்தது. இது மேலும் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக அடுத்த 12 மணி நேரத்தில் நன்கு குறிக்கப்பட்ட குறைந்த அழுத்த பகுதியில் பலவீனமடைய வாய்ப்புள்ளது.


ஆழ்ந்த அழுத்தத்தின் தாக்கத்தின் கீழ், மகாராஷ்டிரா, தெற்கு கொங்கண் மற்றும் கோவாவின் சில பகுதிகளில் புதன்கிழமை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அக்டோபர் 15 ஆம் தேதி, கொங்கண் மற்றும் கோவா, மத்திய மகாராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் ஆகிய பகுதிகளில் மிதமான முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


ALSO READ: ஊழலுக்கு துணைபோகும் அரசு அதிகாரிகள் யாரும் தப்பா முடியாது: MKS


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR