புதுடெல்லி: கிழக்கு லடாக்கிலுள்ள பாங்கோங் த்சோவின் தெற்குப் பகுதியில் உள்ள ஸ்பாங்கூர் கேப் பகுதியில் ஆயிரக்கணக்கான துருப்புக்கள், டாங்கிகள் மற்றும் ஹோவிட்சர் பீரங்கிகளை சீனா அணிதிரட்டியுள்ளது. சீன படையினர் இந்திய வீரர்களுக்கும் இடையில் துப்பாக்கி சுடும் தூரத்தில் ஒரு துப்பாக்கி சுடும் தூரத்தில் உள்ளனர். சீனா மேற்கொண்ட இந்த நடவடிக்கையை அடுத்து, இந்திய வீரர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய துருப்புக்கள் எல்.ஏ.சி பகுதியில் சுசுலுக்கு அருகே பாங்கோங் த்சோவின் தெற்கு கடற்கரையில் ராணூவ மூலோபாய ரீதியாக உயரமான இடங்களில் தொடர்ந்து கட்டுபாட்டை வைத்துக் கொண்டுள்ளனர். இதை அடுத்து, சீன மக்கள் விடுதலை இராணுவம் (பி.எல்.ஏ) ஆகஸ்ட் 30 முதல் குருங் மலைக்கும் மாகர் மலைக்கும் இடையில் அமைந்துள்ள ஸ்பாங்கூர் கேப் பகுதியில் இராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. அரசாங்க அதிகாரி ஒருவர் கூறுகையில், ”சீன படை துருப்புக்கள் மற்றும் ஆயுதங்களை நிறுத்துவதைக் கருத்தில் கொண்டு, இந்திய ராணுவமும் ஸ்பங்கூர் கேப் பகுதியில் தீவிர எச்சரிக்கை நிலையில் உள்ளது” என கூறினார். இரு நாடுகளின் இராணுவமும் துப்பாக்கி சுடும் தூரத்தில் உள்ளன. அதாவது மிகவும் நெருக்கமாக உள்ளன.


ALSO READ | அருணாச்சலத்தில் காணாமல் போன 5 இந்தியர்களை சீனா இந்தியாவிடம் ஒப்படைத்தது..!!!


இது தவிர, எல்லைப் பகுதிகள் மீதான தனது பிடியை வலுப்படுத்தவும், திபெத் பிராந்தியத்தை கட்டுபாட்டில் வைத்துக் கொள்ளவும், சீனா தனது படைகளை நிறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


பங்கோங் ஏரியின் வடக்கு கரையில் உள்ள பி.எல்.ஏ படையினர்  ஃபிங்கர் -4 பகுதியைக் கைப்பற்றும் நடவடிக்கையை மேற்கொண்டனர் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. 


ALSO READ | இந்தியாவின் அதிரடி நடவடிக்கையால் பயத்தில் அடக்கி வாசிக்கும் சீனா... !!!


ஏரியின் வடக்கு கரையில் உள்ள பகுதிகள், 8 ஃபிங்கர்களாக  பிரிக்கப்பட்டுள்ளது. இவை மேலிருந்து பார்க்கும் போது விரல்களை போல் தோன்றுவதால், அவர் ஃபிங்கர் 1 முதல் 8 வரை பெயரிடப்பட்டு அழைக்கப்படுகிறது. வரையிலான பகுதியை இந்தியா எல் ஏ சி பகுதிகள், மற்றும் பிங்கர் -4 பகுதியை தொடர்ந்து கட்டுபாட்டில் வைத்திருக்கிறது, ஆனால் சீனர்கள் அந்நிலையை மாற்ற முயற்சிக்கின்றனர். சீன இராணுவம் ஃபிங்கர் -4 இல் முகாமிட்டுள்ளதற்கும், விரல் -5 மற்றும் விரல் -8 க்கு இடையில் ராணுவத்தை நிறுத்துவதற்கும் இதுவே காரணம்.


சீன துருப்புக்கள், வாகனங்கள் மற்றும் சீன இராணுவத்தின் புதிய துருப்புக்களின் இயக்கம் பங்கோங் ஏரியின் வடக்கு, தெற்கு கடற்கரையில் தெளிவாக பார்க்கலாம். சில இடங்களில், அதிக ஆயுதம் ஏந்திய வீரர்கள் இந்திய வீரர்களுக்கு இடையிலான தூரம் மிக குறைவாக உள்ளது. அவர்கள் துப்பாக்கி சுடும் தூரத்தில் உள்ளனர். 


பதற்றத்தை குறைக்க இந்தியா மற்றும் சீன படைகள் தினமும் பேசுகின்றன. சனிக்கிழமையன்று சுஷூலில் நடந்த பேச்சுவார்த்தைகளில் முடிவு ஏதும் ஏற்படவில்லை என்றாலும், இரு தரப்பினரும் உயர் இராணுவ மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டனர். 


கிழக்கு லடாக்கில் நான்கு மாதங்களாக இந்தியா மற்றும் சீனா இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. பல நிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்று வரும் போதிலும், பதற்றம் தொடர்கிறது.


ALSO READ | சீனாவின் முகத்திரை கிழிந்தது...ஈட்டிகளை ஏந்திய சீன படையினர் புகைப்படம் வெளியீடு..!!