இந்தியா, மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, சீனாவின் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக கண்காணித்து மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான அதிரடி நடவடிக்கைகளால், சீனாவின் தந்திர சதி நடவடிக்கைகளை முறியடித்து, எல்லையில் வலுவான நிலையில் உள்ளது. ராணுவ ரீதியிலான முக்கியமான மலை பகுதிகளை இந்தியா தொடர்ந்து கட்டுபாட்டில் வைத்துக் கொண்டுள்ளது.
மிக முக்கியமான ரெசின் லா (Rechin La ) பகுதி இந்திய கட்டுபாட்டில் உள்ளது. இதன் மூலம் பாங்காங் ஏரி பகுதியில் சீனாவின் நடவடிக்கைகளை தெளிவாக கண்காணிக்க முடிவதோடு, பிங்கர்4 பகுதியையும் கண்காணிக்க முடியும்.
எல்லையில் பிங்கர் 3 பகுதியில், சுமார் 1,500-2,000 சீன துருப்புக்கள் உள்ளன. இந்தியாவும் சம எண்ணிக்கையிலான துருப்புகளை நிலைநிறுத்தியுள்ளது.
சீனாவிற்கு நெருக்குதல் அளிக்கும் வகையில் லடாக் எல்லை பகுதியில் 15 முதல் 30 டாங்குகளையும் இந்தியா நிறுத்தியுள்ளது.
இந்தியாவின் மற்றொரு பலம் என்னவென்றால், கடும் குளிர் பகுதியில் தாக்குபிடிக்கும் இந்திய வீரர்களின் திறன். மேலும் இந்தியா, குளிர் பகுதியில் எல்லவிதமான ஏற்பாடுகளையும் செய்து கொண்டு தான் அங்கு நிற்கிறது.
சீன படையினர் குளிரில் தாக்குபிடிக்கும் திறன் இல்லாதவர்கள்.
சீனா நடத்தும் எந்த வித நடவடிக்கைகக்கும் பதிலடி கொடுக்க இந்தியா தயார் நிலையில் உள்ளது.இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகள் மற்றும் உறுதியான நிலைப்பாட்டினால், சீனா தற்போது அடக்கி வாசிக்கிறது.
பல நாட்களாக மிகவும் பதற்றமாக இருந்த இந்திய சீன எல்லையில் உள்ள லடாக் (Ladakh) பகுதியில் தற்போது சிறிது அமைதி நிலவுகிறது. இருப்பினும் படைகள் எதுவும் பின்வாங்கப்படவில்லை.
மேலும் படிக்க | குளிரில் உறையப்போகும் லடாக்.. இனியாவது எல்லையில் தொல்லைகள் தீருமா..!!
இதற்கிடையில், வியாழக்கிழமை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் வெளியுறவு அமைச்சர். எஸ். ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் பங்கேற்கவுள்ளனர், அதைத் தொடர்ந்து ரஷ்யா-இந்தியா-சீனா வெளியுறவு அமைச்சர்களின் மதிய உணவு கூட்டம் நடைபெறும்.
மே மாதம் லடாக் (Ladakh) பகுதியில் பதற்றம் தொடங்கியதிலிருந்து ஜெய்சங்கருக்கும் வாங்கிற்கும் இடையிலான முதல் இருதரப்பு சந்திப்பாகும். கால்வன் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட பயங்கர மோதலுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு ஜூன் 17 அன்று இரு தலைவர்களும் தொலைபேசியில் பேசினர், தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் இறந்தனர். தாக்குதலில் சீனா தரப்பில் எவ்வளவு பேர் இறந்தனர் என்பது இது வரை தகவல் வெளியிடப்படவில்லை.
இந்திய சீன எல்லை பதற்றத்தில் இந்தியாவிற்கு அமெரிக்கா வலிய வந்து உதவிக்க்ரம் நீட்டுகிறது.
ரஷ்யா இஸ்ரேல் என அனைத்தும் இந்தியாவிற்கு ஆதரவாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
யானை பலத்துடன் உள்ள இந்தியா ட்ராகன் கண்ணில் விரல் விட்டு ஆட்டுகிறது.
மேலும் படிக்க | அருணாச்சல பிரதேசத்தில் பிரச்சனையை கிளப்பும் சீனா; பல கிராமங்கள் காலி செய்யப்பட்டன!!