இந்தியாவின் பாதுகாப்புப் படைத் தலைவரான ஜெனரல் பிபின் ராவத், கிழக்கு லடாக்கில், எல்லை பகுதியில், சீனா தொடர்ந்து அத்துமீறி வருவதால், பதற்றம் அதிகமாக உள்ளது என்றும், மீண்டும் ஒரு மோதல் ஏற்படாது என உறுதியாக கூற இயலாது என்றும் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்புக் கல்லூரி ஏற்பாடு செய்திருந்த ஒரு வெபினாரின் போது, உரையாற்றிய ​​ஜெனரல் ராவத் (Bipin Rawat) , “மக்கள் விடுதலை இராணுவம் (பி.எல்.ஏ) லடாக்கில் தவறாக நடந்துகொண்டதன் எதிர்பாராத விளைவுகளை எதிர்கொள்கிறது, ஏனெனில் இந்திய இராணுவத்தின் உறுதியான மற்றும் வலுவான பதில் நடவடிக்கை எடுத்துள்ளது. சீனாவின் தொடர்ச்சியான அத்துமீறலால் மீண்டும் ஒரு மோதல் ஏற்படாது என உறுதியாக கூற இயலாது” என்றார்.


சீனா (China)மட்டுமல்லாது, ஜம்மு-காஷ்மீரின் யூனியன் பிரதேசத்தில் தொடர்ந்து மறைமுக போரை தொடுக்க அண்டை நாடான பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. பாகிஸ்தான் இராணுவமும் அதன் உளவுத்துறை நிறுவனமான ஐ.எஸ்.ஐ யும் ஜம்மு காஷ்மீர் பகுதியில் (Jammu and Kashmir)  பினாமி போரை நடத்தி வருகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்


இஸ்லாமாபாத், சமூக ஊடகங்களின் மூலம் இந்தியாவிற்குள் உள்ள சமூக ஒற்றுமையை குலைக்கவும் வகுப்புவாத வன்முறையை தூண்டவும் தொடர்ந்து சதி செய்து வருகிறது என்றார். 


பாகிஸ்தானில் (Pakistan) தற்போதைய பொருளாதார நெருக்கடி உள்ளது. பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளித்து வருவதன் காரணமாக நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (FATF) சாம்பல் பட்டியலில் இருந்து வெளியே வர இயலாத நிலையில் உள்ளது என ராவத் மேலும் கூறினார்


"வளர்ந்து வரும் மத மற்றும் இன அடிப்படைவாதம், உள் நாட்டு போராட்டங்கள் எதிர்காலத்தில் பாகிஸ்தான் நிலையை மேலும் மோசமாக்கும் என்றார்," என்று அவர் கூறினார்.


தவிர, பாதுகாப்புத் துறையில் , தற்சார்பு இந்தியாவின் முயற்சியில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை ராவத் கோடிட்டுக் காட்டினார்.


"வரவிருக்கும் ஆண்டுகளில், நமது பாதுகாப்புத் தொழில் அதிவேகமாக மேம்பட்டு வருவதைக் காணலாம். இந்தியாவில் முழுமையாக தயாரிக்கப்பட்ட அதிநவீன ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் நமது பாதுகாப்பை வலுப்படுத்தும். பாதுகாப்பு ஒத்துழைப்பைப் பொருத்தவரை, பரஸ்பர நம்பிக்கை மற்றும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளுடன் கூட்டாண்மைகளை வளர்ப்பதில் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை இந்தியா புரிந்து வைத்துள்ளது”என்று வெபினாரின் போது ஜெனரல் பிபின் ராவத் கூறினார்.


ALSO READ | புகார் கொடுப்பவர் SC/ST என்பதால் மட்டுமே, உயர்சாதியினர் சட்ட உரிமையை மறுக்க முடியாது: SC


வெள்ளிக்கிழமை நடைபெற்ற எட்டாவது சுற்று கார்ப்ஸ் கமாண்டர்-நிலை பேச்சுவார்த்தையில் கிழக்கு லடாக்கில் உள்ள மோதல் உள்ள அனைத்து பகுதியில் இருந்தும், சீன வீரர்கள் பின்வாங்க வேண்டும் என இந்திய ராணுவம் அழுத்தம் கொடுக்க உள்ளது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. கிழக்கு லடாக்கில் உள்ள எல்லை பகுதியில் இந்தியப் பக்கத்தில் உள்ள சுஷூலில் காலை 9:30 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.


ஆறு மாத காலமாக நிலவும் பதற்றத்தை தீர்ப்பதற்கு இரு தரப்பினருக்கும் இடையிலான பல சுற்று பேச்சுவார்த்தைகள் உறுதியான பலனைத் தரவில்லை என்பதால், கிழக்கு லடாக்கின் பல்வேறு மலைப்பகுதிகளில் சுமார் 50,000 இந்திய இராணுவத் துருப்புக்கள் அங்கே பணியில் உள்ளனர். தற்போது அவர்கள் முழுமையான தயார் நிலையில் உள்ளனர். சீன மக்கள் விடுதலை இராணுவமும் (PLA) சம எண்ணிக்கையிலான துருப்புக்களை நிறுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ALSO READ | 4.39 crore fake Ration cards were made in last seven years 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR