தேசிய கொடியெல்லாம் இல்லை இனி காவி கொடிதான் - சர்ச்சையை கிளப்பிய பாஜக தலைவர்
இனி மூவர்ண கொடிக்கு பதிலாக காவி கொடிதான் பறக்கும் என கர்நாடக பாஜக தலைவர் ஈஸ்வரப்பா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியில் ஆட்சி செய்துவரும் பாஜக நாடு முழுவதையும் காவிமயமாக்க முயல்வதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்துவருகின்றனர். அதற்கு வலு சேர்க்கும் வகையில் பாஜகவினரின் பேச்சும் இருக்கிறது.
அந்தவகையில் கர்நாடக மாநில பாஜக தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.எஸ். ஈஸ்வரப்பா தற்போது கூறியிருக்கும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
அவர் பேசியது பின்வருமாறு: இந்த நாட்டில் காவிக்கொடி நீண்ட காலமாகவே மதிக்கப்படுகிறது. காவி கொடிக்கென்று ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு வரலாறு உண்டு. காவி கொடி தியாகத்தின் சின்னம். அதை வளர்த்தது ஆர்எஸ்எஸ். காவி கொடி முன் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். காவி கொடி இன்று அல்லது ஒருநாள் இந்த நாட்டின் தேசியக் கொடியாக மாறலாம். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
மேலும் படிக்க | தாகத் கொடுத்த அடி - கங்கனாவின் அடுத்த அவதாரம்
காங்கிரஸ் கட்சியின் எப்போது சொன்னாலும் நாங்கள் மூவர்ணக் கொடியை ஏற்ற வேண்டியதில்லை. நமது அரசியலமைப்பின்படி மூவர்ணக் கொடிதான் தேசியக் கொடி. அதற்குத் தகுதியான மரியாதையை நாங்கள் தற்போது வழங்கிவருகிறோம்” என்றார்.
ஈஸ்வரப்பா இப்படி பேசுவது முதல்முறையல்ல. அவர் ஏற்கனவே, கடந்த பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி “செங்கோட்டை உள்பட எல்லா இடங்களிலும் காவி கொடியை ஏற்றுவோம். இன்றோ நாளையோ இந்தியா இந்து நாடாக மாறும்” என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவின் ஆட்சி அனைவருக்குமான ஆட்சி. சமத்துவமான ஆட்சி என மோடி உள்ளிட்ட மேலிட தலைவர்கள் கூறிவரும் சூழலில் அக்கட்சியின் மாநில தலைவர்கள் தொடர்ந்து இதுபோன்று பேசிவருகின்றனர். ஆனால் இதையெல்லாம் பாஜகவின் மேலிடம் கண்டிப்பதாக தெரியவில்லை என பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
மேலும் தேசம், தேசப்பற்று என்று மூச்சுக்கு முன்னூறு தடவை பேசும் பாஜகவினர்தான் தேசிய கொடியை தொடர்ந்து அவமதித்துவருகிறார்கள். அவர்கள் மற்றவர்களுக்கு தேச பற்று குறித்து அறிவுரை கூறுவதைவிட தங்களுக்கு தாங்களே அறிவுரை கூறிக்கொண்டு மாற வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR