பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், உற்பத்தி வரியை குறைக்க முடியாது என மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது...!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தி வரியாக மத்திய அரசு லிட்டருக்கு 19 ரூபாய் 48 காசும், டீசல் மீது லிட்டருக்கு 15 ரூபாய் 33 காசும் வசூலிக்கிறது. இதனிடையே பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் வகையில், உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 


உற்பத்தி வரியை குறைப்பதால், நிதி பற்றாக்குறை அதிகரிக்கும். நடப்பு கணக்கு பற்றாக்குறையிலும் தாக்கம் ஏற்படும். இதனால், வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி கிடைக்காமல் பாதிக்கப்படும் என்றும் ,பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவதும் சரியான தீர்வாக அமையாது என்றும் கருத்து நிலவுகிறது.


மத்திய அரசு ஏற்கனவே ரூ.98 ஆயிரம் கோடிக்கு வருமான வரி சலுகையும், ரூ.80 ஆயிரம் கோடிக்கு ஜி.எஸ்.டி. குறைப்பும் அளித்துள்ளது அதனால்தான், பெட்ரோலிய பொருட்களின்  விலை உயர்ந்தபோதிலும், பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. 


இதனால் மக்கள், தாங்கள் பயன்படுத்தும் பெட்ரோலுக்கு, உரிய விலையை கொடுத்தாக வேண்டும் என்ற கருத்து மத்திய அரசு வட்டாரங்களில் நிலவுகிறது. இதனால் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க முடியாது என மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.


இதனிடையே ,சென்னையில் இன்று பெட்ரோல் விலை  மீண்டும் 88 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு 84 ரூபாயாகவும், டீசல் விலை 81 காசுகள் உயர்ந்து,  77ரூபாய் 07 காசாகவும்  உள்ளது.