புதுடெல்லி: COVID-19 இன் மூன்றாவது அலைக்கு சாட்சியாக இருக்கும் தேசிய தலைநகர் டெல்லியில் (Delhi), வைரசின் களியாட்டம் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருகின்றது. ஒரே நாளில் 7,745 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு அனைத்து முந்தைய பதிவுகளும் முறியடிக்கப்பட்டன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 77 இறப்புக்கள் பதிவாகியுள்ளன. இது தொற்றுநோய் துவங்கியதிலிருந்து ஒரே நாளில் பதிவாகியுள்ள அதிகபட்ச இறப்பு எண்ணிக்கையாகும் இது. இந்த தரவுகளுடன் தில்லியில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,38,529 ஐ எட்டியுள்ளது, இறந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 6,989 ஆக உள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் 50,754 பேருக்கு COVID-19 சோதனைகள் செய்யப்பட்டது என்றும், இதில், தொற்று வீதம் இதுவரை இல்லாத அளவு மிக அதிகமாக 15.26 சதவீதமாக இருந்தது என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சோதிக்கப்பட்ட மாதிரிகளில் ஆறில் ஒருவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


பண்டிகை காலம் மற்றும் மாசு அளவு உயர்ந்து வருவதால் திடீரென பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நவராத்திரி (Navratri) கொண்டாட்டங்கள் அக்டோபர் 25 அன்று முடிவடைந்த நிலையில், அடுத்த திருவிழாக்கள் தீபாவளி மற்றும் சத் பூஜை ஆகியவை முறையே நவம்பர் 14 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும்.


ALSO READ: கொரோனாவை தடுப்பதில் BCG தடுப்பூசி பயனளிக்கும் என்கிறது புதிய ஆய்வு..!!!


முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், தேசிய தலைநகரில் COVID-19 இன் மூன்றாவது அலை உச்சத்தை எட்டியுள்ளது என்றும், தினமும் அதிகரிக்கும் தொற்றின் எண்ணிக்கை இது மோசமானதாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறது என்றும் தெரிவித்தார்.


“COVID-19 இன் மூன்றாவது அலை டெல்லியில் உச்சத்தில் உள்ளது. தொற்றின் எண்ணிக்கை இது இதுவரையிலான மோசமான அலை என்பதைக் காட்டுகிறது. ஆனால் தொற்று விரைவில் குறையும்” என்று ஜெயின் கூறினார்.


டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் COVID-19 நோயாளிகளுக்கு படுக்கைகளின் எண்ணிக்கையை அரசாங்கம் அதிகரித்துள்ளது. ஆனால் ஹோட்டல் மற்றும் விருந்து அரங்குகளில் இதற்கான ஏற்பாடுகளை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


அதிகப்படியான சோதனைகள் மற்றும் தொடர்பு-தடமறிதல் (Contact Tracing) ஆகியவற்றின் காரணமாக தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.


ALSO READ: Shocking: கொரோனா தொற்றால் காது கேளாமல் போகலாம்: லண்டன் ஆய்வு


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR